வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கமலையே வியக்க வைத்த 5 நடிகர்கள்.. பகத் பாசிலை தூக்கி வைத்துக் கொண்டாடும் உலகநாயகன்

தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் புகழ்பெற்றிருக்கும் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக உள்ள உலகநாயகன் கமலஹாசன் இன்றைய தலைமுறை ஹீரோக்களுக்கு கூட டஃப் கொடுக்கும் வகையில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் 5 நடிகர்கள் கமலையே வியக்க வைத்துள்ளார். அதிலும் ஸ்பெஷல் ஆக பகத் பாசிலை தலையில் தூக்கி வைத்துக் கமல் கொண்டாடுகிறார்.

நாசர்: 1995 ஆம் ஆண்டு இயக்குனர் பி சி ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் கமலஹாசன் உடன் அர்ஜுன், கௌதமி, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1995ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதினை பாடல்களே இல்லாமல் வெளிவந்த “குருதிப்புனல்” திரைப்படம் பெற்றுள்ளது. சர்வதேச திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

இதில் கமலஹாசன் ஆதிநாராயணன் என்னும் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாகவும் , நாசர் தீவிரவாத அமைப்பின் தலைவராக பத்ரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியன், அவ்வை சண்முகி, அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் கமலஹாசன் மற்றும் நாசர் இணைந்து நடித்துள்ளனர். அதிலும் கமலஹாசன் மற்றும் நாசர் இருவரின் காம்போ படத்திற்கு வெற்றியாகவும் அமைந்துள்ளது. இந்தப் படங்களில் எல்லாம் கமலை நாசர் தன்னுடைய நடிப்பு திறமையால் வியக்க வைத்திருப்பார்.

Also Read: கமல் போலவே டான்சில் பட்டையை கிளப்பிய 2 நடிகர்கள்.. வாய்ப்புகள் இல்லாததால் ஸ்கூல் ஆரம்பித்த நிலைமை

பசுபதி: 2004 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் எழுதி, இயக்கி, நடித்த விருமாண்டி படத்தில் கமலஹாசன் உடன் அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் கமலஹாசன் விருமாண்டி என்னும் கதாபாத்திரத்திலும் பசுபதி கொத்தால தேவன் என்னும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

கமலஹாசனும் பசுபதியும் இப்படத்தில் நண்பர்களாக இருந்து பின்னர் விருமாண்டிக்கு சொந்தமான சொத்துக்களை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் அவரது குடும்பத்தில் உள்ளவர்களை பசுபதி கொன்று விடுகிறார். கொலைக்கான காரணத்தையும் கொலை செய்தவரையும் பழிவாங்கும் நோக்கில் இப்படமானது அமைந்துள்ளது. விருமாண்டி படத்தில் கமலஹாசனுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் பசுபதியின் நடிப்பானது இருக்கும். இது கமலை வியப்படைய வைத்தது.

Also Read: இப்படியும் நடிக்க முடியுமா என வியக்க வைத்த பகத் பாசிலின் 4 படங்கள்.. விக்ரம் அமரை மீண்டும் புக் செய்த கமல்

சமுத்திரக்கனி: சமுத்திரக்கனி திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற துறைகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழ் திரை உலகில் சமுத்திரகனி வில்லனாக அறிமுகமாகி தற்பொழுது குணசித்திர கதாபாத்திரங்களிலும் சமூகத்திற்கு தேவையான கருத்து கொடுக்கக் கூடிய படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தேர்ந்தெடுக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் வெற்றி கண்டு இவரது நடிப்பினை உலகநாயகன் கமலஹாசனே ரசிக்கும் அளவிற்கு திரை துறையின் தனது பங்களிப்பை அளித்துள்ளார். கூடிய விரைவில் இவர்கள் இருவரும் சேர்ந்து படத்தில் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

தனுஷ்: இவர் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என பன்முக திறமைகளைக் கொண்டவராக தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். கமலஹாசனும் தனுஷும் இதுவரை இணைந்து ஒன்றாக நடித்தது இல்லை என்றாலும் கூட தனுஷின் நடிப்பானது உலகநாயகன் கமலஹாசனையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. தமிழ் சினிமாவையும் தாண்டி கோலிவுடிலும் கலக்கி வருகிறார். இதனால் கமலஹாசன் தனுஷின் அசுர வளர்ச்சியை கண்டு வியப்படைந்ததுடன் தனது தயாரிப்பிலும் தனுஷை அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஹீரோ ஆதிக்கத்தை உடைத்த முதல் தமிழ் படம்.. கமல் நடித்து 150 நாட்கள் ஓடி சாதனை

பகத் பாசில்: இவர்கள் இருவரும் விக்ரம் படத்தில் ஒரே கூட்டாளிகளாக இருப்பது போல் நடித்துள்ளனர். கமலஹாசன் மற்றும் பகத் பாசிலின் காம்போ படத்தில் அல்டிமேட் ஆக இருக்கும். விக்ரம் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இவரின் நடிப்பை பார்த்து கமலஹாசன் தனது அடுத்த தயாரிக்கும் படங்களில் ஒப்பந்தம் செய்யும் எண்ணத்தில் இருப்பது போல் தெரிகிறது. ஏனென்றால் இவரின் நடிப்பு தனித்துவம் வாய்ந்ததாகவும் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றதாகவும் அமைந்துள்ளது.

இவ்வாறு இந்த 5 நடிகர்களும் உலக நாயகன் கமலஹாசனையே தனது நடிப்பின் மூலம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளவர்கள் ஆவர். அதிலும் மலையாள நடிகர் ஆன பகத் பாசில் விக்ரம் படத்தில் நடித்ததன் மூலம் கமலஹாசன் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Trending News