ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நகைச்சுவையான பட்டப் பெயர்களைக் கொண்ட 5 ஹீரோக்கள்.. ராமராஜன் புகழை கெடுக்க நடந்த சதி

சினிமாவில் நடிகரை அடையாளப்படுத்திய கதாபாத்திரம் அல்லது அவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்த சில விஷயங்கள் அவர்களுக்கு பட்டப் பெயராக அமைந்து விடுகிறது. ஆனால் அவர்களது மார்க்கெட் உயரும் போது அவருக்கு சில நகைச்சுவையான பட்டப் பெயர்கள் வைப்பதால் அவரது அந்தஸ்து குறைவது போன்ற தோன்றுகிறது. நகைச்சுவையான பட்டப் பெயர்களைக் கொண்ட 5 நடிகர்களை பார்க்கலாம்.

ஜெமினி கணேசன் : அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களுக்கு இணையாக பார்க்கப்பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன். காதல் படங்கள் என்றால் அதில் முதல் தேர்வு ஜெமினி கணேசன் தான். அவ்வாறு அந்த காலத்தில் காதல் மன்னனாக ஜெமினி கணேசன் வலம் வந்தார். இந்நிலையில் அந்த காலத்தில் ஜெமினி கணேசன் பெயரைக் கெடுப்பதற்காக “சாம்பார்” என அழைத்தனர்.

ராமராஜன் : ஒரு காலகட்டத்தில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் ராமராஜன். இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் ராமராஜன் டவுசர் அணிந்திருப்பார். இவர் புகழின் உச்சத்தில் இருந்தபோது அதை கெடுப்பதற்காக “டவுசர்” என்ற பெயரை வைத்த அழைத்தனர்.

மைக் மோகன் : அப்போது ரஜினி, கமல் படங்களை விட மோகனின் படங்கள் அதிக நாள் ஓடுவதால் இவருக்கு வெள்ளி விழா நாயகன் என்ற பெயரும் உண்டு. இவருடைய படங்களில் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இவருடைய பெரும்பான்மையான படங்களில் இளையராஜாதான் இசை அமைத்திருப்பார். மேலும் மோகன் பல படங்களில் பாடகர் ஆகவே நடித்திருந்ததால் இவருக்கு “மைக் மோகன்” என்ற பெயர் வந்தது.

நட்டி நடராஜன் : சதுரங்கவேட்டை படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நட்டி நடராஜன். இவர் நடிப்பை தாண்டி ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர் மக்களுக்கு விழிப்புணர்வு தருகின்ற அல்லது உஷாபடுத்துகின்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் “ரேர் பீஸ்” என்று அழைக்கப்படுகிறார்

சூரி : நகைச்சுவை கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுக்க கூடியவர் சூரி. தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை என்ற படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் சூரி “பரோட்டா சூரி” என பரவலாக அறியப்படுகிறார். இதற்கு காரணம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சூரி நடித்த பரோட்டா காமெடி தான் அவருக்கு பட்டப் பெயராக அமைந்தது.

Trending News