திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவாஜியுடன் நடித்து எம்ஜிஆர் உடன் நடிக்காமல் போன 5 நடிகைகள்.. கடைசி வரை ஆசைப்பட்ட ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப போட்டியாளர்கள் உருவாக்குவது இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. 60, 70களில் கோலிவுட்டில் ஜாம்பவான்களாக இருந்த எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடிப்பதற்கு நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருப்பார்கள். சிவாஜி உடன் நடித்து எம்ஜிஆர் உடன் 5 நடிகைகளால் நடிக்க முடியாமல் போனது. அதிலும் ஸ்ரீதேவி எப்படியாவது எம்ஜிஆர் உடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என கடைசி வரை ஆசைப்பட்டார்.

சுஜாதா: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த சுஜாதா, 70-களில் டாப் ஹீரோக்களான சிவாஜி, ஜெய்சங்கர், சிவக்குமார், விஜயகுமார், முத்துராமன், கமலஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்டருடன் இணைந்து நடித்தாலும் அவரால் எம்ஜிஆர் உடன் மட்டும் இணைந்து நடிக்க முடியாமல் போனது. இவர் 1986 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்குள் வைரம் என்ற படத்தில் சிவாஜி கணேசனுக்கு கதாநாயகியாக நடித்திருப்பார். ஆனால் அதே சமயத்தில் சிவாஜிக்கு டஃப் கொடுக்கும் நடிகராக இருந்த எம்ஜிஆர் உடன் சுஜாதாவால் ஜோடி போட முடியவில்லை.

ஸ்ரீ வித்யா: 40 ஆண்டுகளாக திரையுலகில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 70களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ வித்யா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் ,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தினார். சிவாஜி கணேசன் உடன் இணைந்து 1966 ஆம் ஆண்டு வெளியான திருவருட்செல்வர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது சினிமா பயணத்தை துவங்கினார். பின்பு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீ வித்யா கடைசி வரை எம்ஜிஆர் உடன் மட்டும் இணைந்து நடிக்க முடியாமல் போனது.

Also Read: இறக்கும் வரை எம்ஜிஆர் கூடவே இருந்த 5 பாடிகார்ட்ஸ்.. கடைசி வரை கட்டிக் காப்பாற்றிய ரகசிய புகைப்படம்

உஷா நந்தினி: 70களில் தென்னிந்திய திரைப்படங்களில் அதுவும் குறிப்பாக மலையாள படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழில் சிவாஜி கணேசனுக்கு கதாநாயகியாக பொன்னூஞ்சல், கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை, மனிதனும் தெய்வமாகலாம், என்னைப்போல் ஒருவன் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஆனால் இவரால் கடைசி வரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்க முடியாத வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிரமிளா: தென்னிந்திய படங்களில் 70, 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தமிழ் மட்டுமல்ல மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் இவர் கவர்ச்சி நடிகையாக இளசுகளின் மனதை கட்டி போட்டு இருந்தார். அத்துடன் 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து இவருக்குத் தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் செவாலியர் சிவாஜி கணேசன் உடன் மனிதரில் மாணிக்கம், தங்கப்பதக்கம், கவரிமான், ரத்த பாசம் போன்று பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். ஆனால் இவர் எம்ஜிஆரின் படத்தில் நடிப்பதற்கு அவ்வளவு ஆசைப்பட்டாராம். ஆனால் அது கடைசி வரை நிறைவேறாத கனவாகவே போனது.

Also Read: எம்ஜிஆர் உடன் கவுண்டமணி நடித்த ஒரே படம்.. இன்று வரை மறக்காத நக்கல் மன்னன்

ஸ்ரீதேவி: 70களில் இளசுகளின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் டாப் ஹீரோயின் ஆக வலம் வந்த ஸ்ரீதேவி, இதுவரை 300 படங்களில் நடித்திருக்கிறார். இவர் சிவாஜி உடன் பாபு, கவரிமான் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். ஆனால் இவரால் எம்ஜிஆர் உடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை.

இவ்வாறு இந்த 5 நடிகைகளும் டாப் ஹீரோயினாக சினிமாவில் கலக்கினாலும் அவர்களால் எம்ஜிஆர் உடன் மட்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதை துரதிஷ்டமாக நினைக்கின்றனர். இதற்காக அவர்கள் பலமுறை முயற்சி செய்தும் அந்த வாய்ப்பு அமையாமல் போனதால், அவர்களது கனவு நிறைவேறாத கனவாகவே மாறியது.

Also Read: கிளாமரான பாடலுக்கு பிள்ளையார் சுழி போட்ட எம்ஜிஆரின் 5 படங்கள்.. பட்டையை கிளப்பிய உலகம் சுற்றும் வாலிபன்

Trending News