புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அடுத்த சில்க் ஸ்மிதா நாங்கள் தான் என போட்டி போட்ட 5 நடிகைகள்.. அட எல்லாமே டி ஆர் கண்டுபிடிப்பு தான்!

சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சியில் அவரை அடித்துக் கொள்வதற்கு ஆளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தனது படங்களில் அதீத கவர்ச்சி காட்டி நடிக்க கூடியவர் ஆவார். ஆனால் சினிமாவில் ஒரு சில நடிகைகள் அடுத்த சில்க் ஸ்மிதா நாங்கள் தான் என்று போட்டி போட்டு கவர்ச்சி காட்டி நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த நடிகைகள் எல்லோரும் டி ஆர் ராஜேந்தர் படத்தில் அறிமுகமான நடிகைகள் ஆவார்கள். அப்படியாக சில்க் ஸ்மிதா இடத்திற்கு போட்டி போட்ட 5 நடிகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

ஷர்மிலி: சினிமாவில் குரூப் டான்சராக அறிமுகமான இவர் அதன் பின் காமெடி நடிகர் கவுண்டமணி உடன் நிறைய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அதன்பின் கிளாமர் நடிகையாகவே மாறிய ஷர்மிலி ஒரு சில படங்களில் பாடல்களுக்கு மட்டும் தோன்றினார். அதிலும் வீராச்சாமி படத்தில் மும்தாஜின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சில்க் ஸ்மிதாவின் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு கவர்ச்சியில் இறங்கி நடித்தார். இருந்தாலும் அந்த அளவிற்கு ஷார்மிலிக்கு அதிக அளவு நடிப்பை காட்டும் அளவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

Also Read: வாய்ப்பு கிடைக்காமல் பலான படங்களில் நடித்த நடிகைகள்.. ஆள் பாதி, ஆடை பாதி என்று போன வாழ்க்கை

மேக்னா நாயுடு: தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை மேக்னா நாயுடு. அதனைத் தொடர்ந்து ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி என்ற திரைப்படத்தில், கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் என்னும் பாடலில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிரங்கடித்து இருப்பார். அதிலும் தனது படங்களில் தொடர்ந்து அதீத கவர்ச்சி காட்டி நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

மும்தாஜ்: தமிழில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மும்தாஜ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். அதிலும் இவர் நடிக்கும் படங்களில் சில்க் ஸ்மிதாவிற்கே டஃப் கொடுக்கும் விதத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடிக்கக் கூடியவர் ஆவார். இருந்தாலும் சினிமாவில் சில்க் அளவிற்கு மும்தாஜிற்கு புகழ் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

Also Read: கவர்ச்சியை காட்டி கண்டமாக்கிய மும்தாஜின் 6 படங்கள்.. குஷி படத்தில் பயங்கர டஃப் கொடுத்த தளபதி

சார்மி: 2002 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை சார்மி. அதிலும் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர்  கவர்ச்சியிலும் பட்டய கிளப்பியுள்ளார். தற்பொழுது சமீபத்தில் எந்த ஒரு பட வாய்ப்புகளும் கைவசம் இல்லாமல் இருந்து வருகிறார்.

விசித்ரா: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர்தான் விசித்ரா. அதனைத் தொடர்ந்து கதாநாயகி, வில்லி, டான்ஸர், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து மாஸ் காட்டியுள்ளார். அதிலும் அதிக அளவிலான படங்களில் கவர்ச்சி தூக்கலான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாகவே வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து முத்து படத்தில் வருகின்ற நாதாவாக காமெடியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்பொழுது கவர்ச்சி என்ற நிலைக்கே இடமில்லாமல் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

Also Read: சிம்பு பட நாயகியின் அட்டகாசமான போஸ் வைரலாகும் புகைப்படம் .!

Trending News