திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

கிரிக்கெட் வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 5 நடிகைகள்.. இந்த லிஸ்ட்ல தோனியும் இருக்காரா?

கிரிக்கெட் வீரர்களுக்கும் திரையுலக பிரபலங்களும் இடையே நல்ல நட்பு உள்ளது. இதன் மூலம் சில கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் சில கிரிக்கெட் வீரர்களுடன் நடிகைகள் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து அதன் பின்பு பிரிந்துவிட்டனர். அவ்வாறு கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகளை தற்போது பார்க்கலாம்.

எம்எஸ் தோனி, ராய்லட்சுமி : சிறந்த கிரிக்கெட் கேப்டனாக விளங்குபவர் எம்எஸ் தோனி. இந்நிலையில் தோனி மற்றும் ராய் லட்சுமி இருவரும் சில வருடங்களாக தொடர்பில் இருந்ததாக இப்போது செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்பின்பு தோனி சாக்ஷி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

ஸ்ரீசாந்த், ஸ்ரேயா சரண் : ஸ்ரீசாந்த் பல நடிகர்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில் ஸ்ரேயா சரண் மற்றும் ஸ்ரீசாந்த் இருவரும் ஒரு விளம்பர படப்பிடிப்பின்போது சந்தித்துள்ளனர். அதன் பின்பு இருவரும் நட்பாகப் பழகி டேட்டிங் செய்ய தொடங்கியுள்ளனர். இதைதொடர்ந்து ஸ்ரீசாந்த் தனது தொழிலில் உச்சத்தில் இருந்ததால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

அப்துல் ரசாக், தமன்னா : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் உடன் நடிகை தமன்னா தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் ஒரு நகைக் கடையில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்பின்பு இவர்களுக்கு திருமணம் ஆக உள்ளதாக தகவல் வெளியானது. அவை அனைத்தையும் தமன்னா மறுத்துவிட்டார்.

சுரேஷ் ரெய்னா, ஸ்ருதிஹாசன் : ஒரு நண்பரின் பாட்டின் மூலம் சுரேஷ் ரெய்னா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் அறிமுகமாகியுள்ளனர். அதன் பின்பு நண்பர்களான இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் பல வருடங்களாக இவர்கள் இதைப்பற்றி எதுவும் வெளியில் சொல்லாமல் இருந்தனர். ஆனால் ஒருமுறை சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டரில் நான் யாரையும் டேட்டிங் செய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

கே எல் ராகுல், நிதி அகர்வால் : நடிகை நிதி அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது. மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலில் இவர்கள் இருவரும் ஒன்றாக அடிக்கடி உணவருந்தும் போட்டோக்கள் வெளியானது. ஆனால் ராகுல், நானும் நிதி அகர்வாலும் நல்ல நண்பர்கள் மட்டுமே என கூறியிருந்தார்.

Trending News