வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிக்ஸ் பேக் வைக்க போராடும் 5 நடிகைகள்.. ஜிம்மே கதியாக கிடக்கும் சமந்தா

ஹீரோயின்களை பொருத்தவரை என்னதான் அழகா இருந்தாலும் உடல் அமைப்பு சிக்குனு இருந்தா தான் பட வாய்ப்புகள் கிடைக்கிறது. இவர்களும் அதற்கான முயற்சியில் தன்னை மேற்படுத்திக் கொள்கின்றனர்.

மேலும் இப்பொழுது எல்லாம் சர்வ காலமும் ஒர்க் அவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அவ்வாறு மஸ்குலர் பெண்ணாக மாறி வரும் 5 நடிகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

Also Read: சமந்தா முதல் சாய் பல்லவி வரை.. டாப் ஹீரோயின்கள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

டாப்ஸி: இவர் தெலுங்கு படம் மூலம் அறிமுகமாகி தமிழில் தனுசு உடன் ஆடுகளத்தில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து பல வாய்ப்புகள் பெற்றுள்ள நிலையில் தற்போது தன் உடல் அமைப்பை ஃபிட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவரின் ஃபிட்னெஸ் புகைப்படம் வெளிவந்து ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இவர் தன் ஜிம் ட்ரெயினருடன் இருக்கும் போஸ்டர் நெட்டிசன்களிடமிருந்து நல்ல விமர்சனத்தை பெற்றது. மேலும் தன் சிக்ஸ் பேக் புகைப்படத்திற்கு வந்த வரவேற்பு கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறார் டாப்ஸி.

ஆண்ட்ரியா: சினிமாவில் பல திறமைகளை கொண்ட இவர் அரண்மனை படத்தில் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். மேலும் இவர் நடிக்க இருக்கும் படங்களின் ரோலுக்கு ஏற்ப தன் உடல் அமைப்பை தயார்படுத்தி வருகிறார். அவ்வாறு அழகு கார்த்திக் இயக்கத்தில் வெளிவர இருக்கும் நோ என்ட்ரி என்றபடத்தில் இவர் நடிக்கிறார். அதில் இவர் அட்வென்சர்ஸ் கதாபாத்திரத்தில் இடம் பெறும் புகைப்படம் வைரலாகி கொண்டிருக்கிறது.

Also Read: சமந்தாவை போல் வனிதாவுக்கு இருக்கும் விசித்திர நோய்.. அவரே வெளியிட்ட சீக்ரெட்

ராசி கண்ணா: தன் சினிமா பயணத்தை மேற்கொள்ள என்றும் டயட்டும், வொர்க் அவுட் ஆகவுமே இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் மேற்கொள்ளும் உணவு முறைகளை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இவருக்கென்று ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் தற்போது வெயிட் லிப்டிங், ஸ்ட்ரெச்சிங், யோகா ஆகிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளது.

சமந்தா: தன் அழகாலும், நடிப்பாலும் ரசிகர் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் தான் சமந்தா. இவர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நபர் ஆவார். மேலும் தமிழ் சினிமாவில் பல பட வாய்ப்புகளை பெற்று வரும் இவர் சமீப காலமாக ஜிம்மே கதியாக இருந்து வருகிறார். அதிலும் சிக்ஸ் பேக் உடல் அமைப்புக்காக இவர் எடுக்கும் எபெக்ட் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. தற்போது விஜய் தேவரகொண்டா உடன் தெலுங்கில் குஷி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

Also Read: சமந்தா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்கும் ஆன்ட்டி நடிகை.. 40 வயதிலும் ஐட்டம் டான்ஸ் ஆட இவ்வளவு ஆசையாம்

ரகுல் ப்ரீத் சிங்: தெலுங்கு,ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். இவர் கார்த்தியுடன் நடித்த தீரன் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பின் சில படங்கள் நடித்திருந்தாலும் தற்பொழுது தன் பாடி பிட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக மஸ்குலர் ஃபிட்டிங்காக புஷ் அப் பயிற்சிகளை எடுத்து வருகிறார். இவர் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் அயலான் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News