திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கூச்சமே இல்லாமல் கவர்ச்சியில் தாராளம் காட்டிய 5 நடிகைகள்.. கிளாமரில் லேடி சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய ஆண்ட்ரியா

சினிமா துறையை பொருத்தவரையிலும் நடிகைகள் ஒரு கவர்ச்சி பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். அதிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்களே கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து வருகின்றனர். அப்படியாக கதைக்கு என்று கூச்சமே இல்லாமல் கவர்ச்சியில் தாராளம் காட்டிய ஐந்து நடிகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

நயன்தாரா: ஆரம்ப காலகட்டத்தில் ஹோமிலியான லுக்கில் நடித்து வந்த இவர் அதன் பிறகு சினிமாவில் தனது அந்தஸ்தை உயர்த்துவதற்காக கவர்ச்சியில் நடிக்க தொடங்கினார். அதிலும் முன்னணி ஹீரோவாக இருக்கக்கூடிய அஜித்துடன் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களில் கிளாமரில் மிரள விட்டிருப்பார். அதன் பிறகு கிளாமருக்கு முழுக்கு போட்ட நயன்தாரா தற்பொழுது ஷாருக்கான் உடன் ஜவான் படத்தில் பாலிவுட்  நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்திருக்கிறார்.

Also Read: 2024-யை குறி வைத்திருக்கும் தளபதி.. லேடி சூப்பர் ஸ்டார் உடன் விஜய் போட்ட பிளான்

ஸ்ரேயா: தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகையாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து டாப் ஹீரோக்களான விஜய், தனுஷ், விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். எப்பொழுதுமே குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டுமே நடித்து வரும் இவர் விக்ரம் உடன் கந்தசாமி படத்தில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்திருப்பார். 

ஆண்ட்ரியா: சினிமா துறையில் பின்னணி பாடகியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ஆண்ட்ரியா. பொதுவாகவே தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சியில் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர். அதிலும் மிஸ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு 2 படத்தின் டிரைலரில் நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில், கண் கூசும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்றே சொல்லலாம்.

Also Read: நடிப்பில் ஆழமாய் பதிந்த ஆண்ட்ரியாவின் 5 படங்கள்.. இப்பவும் ராஜன் பொண்டாட்டிக்கு குறையாத மாஸ்

ரெஜினா கசாண்ட்ரா: கண்ட நாள் முதல் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. அதன்பின் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். அதிலும் சிவகார்த்திகேயனுடன் கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் நல்ல பெயரை பெற்று மளமளவென பட வாய்ப்புகளை பெற்று வந்தார். ஆனால் அவை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறாமல் போனதால் கிளாமரில் நடிக்க தொடங்கினார். அதிலும் உதயநிதியுடன் ஒரு பாடலில் கவர்ச்சி காட்டிய இவர் மிஸ்டர் சந்திரமௌலி என்னும் படத்தில் கௌதம் கார்த்தியுடன் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருப்பார். 

தமன்னா: தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அதிலும் இவரின் படங்களில் ஓரளவு கிளாமர் லுக்கில் நடிக்கும் தமன்னா விஷால் உடன் கத்தி சண்டை, ஆக்சன் போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சி காட்டி நடித்திருப்பார்.

Also Read: ஒரு கோடி சம்பளம் கொடுத்தது சும்மாவா.. தமன்னாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இயக்குனர்

Trending News