ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

ஐட்டம் டான்ஸ் ஆடி பல கோடி சம்பாதித்த 5 நடிகைகள்.. தெறிக்க விட்ட சமந்தா

சினிமாவில் டாப் நடிகையாக உள்ள நடிகைகள் ஐட்டம் பாடலில் ஆட தயங்குவார்கள். ஏனென்றால் அவ்வாறு ஒரு படத்திற்கு கவர்ச்சி நடனம் ஆடினால் அதன்பின்பு அவரது மார்க்கெட் குறைந்துவிடும். ஆனால் அதையும் மீறி பிரபல நடிகையாக உள்ள போதே 5 நடிகைகள் ஐட்டம் பாடல்களில் ஆடி சம்பாதித்துள்ளனர்.

சிம்ரன் : தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போதும் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சிம்ரன். மேலும் விஜய்க்கு இணையாக நடனம் ஆடக் கூடியவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு சிம்ரன் நடனம் ஆடி இருந்தார்.

நயன்தாரா : தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மேலும் தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். மேலும் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் தனுஷுடன் இணைந்து சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லை என்ற பாடலில் நயன்தாரா நடனம் ஆடி இருந்தார்.

கிரண் : ஜெமினி, வின்னர் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கிரண். அதன்பின்பு கவர்ச்சிப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா என்ற ஐட்டம் பாடலுக்கு கிரண் நடனம் ஆடி இருந்தார்.

தமன்னா : விஜய், அஜித், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தமன்னா. மேலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த பாகுபலி படத்திலும் தமன்னா நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

சமந்தா : கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாம் இடத்தை சமந்தா பெற்றுள்ளார். இந்நிலையில் சமந்தா தற்போது பல படங்களில் பிசியாக உள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இந்தப் பாடலுக்குப் பிறகு சமந்தாவின் மார்க்கெட் எங்கேயோ போய் உள்ளது.

Trending News