திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கருப்பு அழகியாய் சினிமாவில் சாதித்து காட்டிய 5 நடிகைகள்.. ரஜினியை, மருமகளாய் புரட்டி எடுத்த சரிதா

Actress Saritha: தன் திறமைக்கேற்ற வாய்ப்பு கிடைப்பது அரிது. அதிலும் தன் நிறத்தால் சினிமாவில் வாய்ப்பு பெறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்நிலையிலும் தன் திறமையால் சாதித்து முன்னேறிய ஹீரோயின்கள் ஏராளம்.

மேலும் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு தன்னை நிரூபித்த ஹீரோயின்கள் மக்களால் பெரிதும் போற்றப்படுவார்கள். அவ்வாறு கருப்பாய் இருந்தும் தன் முயற்சியை கொண்டு சினிமா வாய்ப்பு பெற்ற 5 ஹீரோயின்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: வெளியில் கசிந்த லோகேஷ் ரஜினி பட அப்டேட்.. தலைவர் கொடுத்த செம ஐடியா

சரிதா: இயக்குனர் பாலச்சந்தரால் தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் சரிதா. அதன் பின் அவள் அப்படித்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி சுமார் 140 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிக்கு சாட்சி, புதுக்கவிதை போன்ற படங்கள் இவர் பேர் சொல்லும் படமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நெற்றிக்கண் படத்தில் ரஜினியின் மருமகளாய் புரட்டி எடுத்திருப்பார் சரிதா.

நந்திதா தாஸ்: சுமார் பத்து மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். தமிழில் இவர் நடித்த கன்னத்தில் முத்தமிட்டால், அழகி போன்ற படங்களின் மூலம் முன்னணி கதாநாயகியாக பெரிதும் பேசப்பட்டவர். மேலும் அழகி படத்தில் இவரின் நடிப்பு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும். தமிழில் ஒரு சில படங்களிலே நடித்திருந்தாலும் பல மொழிகளில் நடித்து விருது பெற்ற பெருமையை கொண்டவர்.

Also Read: தொழிலதிபருடன் நெருக்கம் காட்டிய டாப் நடிகை.. பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா?

மல்லிகா: நிழல் குத்து படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் மல்லிகா. அதன்பின் சேரனின் ஆட்டோகிராப் மற்றும் விஜய்யின் தங்கையாக திருப்பாச்சி படத்திலும் பெரிதும் பேசப்பட்டார். அதை தவிர்த்து மலையாள படங்களில் ஆர்வம் காட்டி வந்த இவர் தற்பொழுது சினிமாவிற்கு இடைவெளி விட்டு காணப்படுகிறார்.

தன்சிகா: பேராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்சிகா. அதன் பின் அரவான், பரதேசி போன்ற படங்களில் நடித்த இவர் 2016ல் கபாலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்று, மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். இவர் கருமை நிறமாக இருப்பினும் இவர் மேற்கொண்ட முயற்சிகள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

Also Read: குணசேகரனை மிரட்டும் ஜான்சி ராணி.. கரிகாலன் காதலை ஊத்தி மூடிய ஜனனி

ரித்விகா: சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் ஆக நடித்து வந்த இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தின் மூலம் பெரிதும் பேசப்பட்டார். அதைத்தொடர்ந்து ஒரு நாள் கூத்து, கபாலி, திருமுகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதன் பின் இவருக்கு சரிவர பட வாய்ப்புகள் ஏதும் இன்றி காணப்பட்டு வருகிறார்.

Trending News