2022 ஆம் ஆண்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த 5 நடிகைகள்.. கனவுக்கன்னி ஆன தளபதியின் கதாநாயகி

2022 ஆம் ஆண்டு வெளியான படங்களின் அடிப்படையில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப்பை ஹீரோயின்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை வைத்து இந்த வருடம் யார் ரசிகர்களின் கனவு கன்னி என்பதும் தெரிய வந்துள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி: மலையாள நடிகையான இவர் தமிழில் தனுஷ் உடன் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பெயர் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

அதன் பின் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படத்திலும் கதாநாயகியாக நடித்து இப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நடிகைகளின் லிஸ்டில் 5-ம் இடத்தில் உள்ளார்.

Also Read: டான்ஸ் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்.. சொந்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் வாத்தி

இவானா: நிகிதாவாக லவ் டுடே படத்தின் மூலம் இளசுகளை கொள்ளையடித்த இவரும் மலையாள நடிகை தான். 2012 ஆம் ஆண்டு மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவர். அதன்பின் 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதன் பின் இவர் லவ் டுடே படத்தின் மூலம் செம க்யூட்டாக நடித்து 2022 ஆம் ஆண்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நடிகைகள் லிஸ்டில் 4-ம் இடத்தில் உள்ளார்.

நித்யா மேனன்: பப்லியாக இருந்தாலும் அழகு தான் என்று ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்ட நித்யா மேனன், இந்த வருடம் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் இந்த வருடம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகைகளின் லிஸ்டில் 3ம் இடத்தை பிடித்திருக்கிறார்.

திரிஷா: மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் குந்தவையாக நடித்த திரிஷா, அந்தக் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்திருக்கிறார். 39 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் இப்போது இருக்கும் டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் தொடர்ந்து நீடித்து இருப்பதுடன், 2022ல் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளின் லிஸ்டில் 2-ம் இடத்தில் உள்ளார்.

Also Read: பட வெற்றிக்காக பரிசளித்த காரை வாங்க மறுத்த லவ் டுடே பிரதீப்.. என்ன காரணம் சொன்னார் தெரியுமா?

ராஷ்மிகா மந்தனா: கன்னட நடிகையான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2021 ஆம் ஆண்டு கார்த்தியுடன் சுல்தான் படத்தின் மூலம் நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் தளபதி விஜயின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே என்கின்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இதில் எக்ஸ்பிரஷன் குயின் ராஷ்மிகாவின் ஆட்டம் இளசுகளை குத்தாட்டம் போட வைத்து, 2022ல் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக மாறி லிஸ்டில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

Also Read: 2022-ல் சிறந்த டாப் 5 ஹீரோஸ்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஏஜென்ட் விக்ரம்

இவ்வாறு இந்த 5 நடிகைகள் தான் 2022 ஆம் ஆண்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற டாப் 5 நடிகைகள் ஆகும். அதிலும் விஜய்யுடன் ராஷ்மிகா நடித்திருக்கும் வாரிசு படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே ஒரே பாடலில் ரசிகர்களை கொள்ளையடித்து இந்த வருட கனவு கனியாகவும் மாறி உள்ளார்.

Next Story

- Advertisement -