வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எங்களுக்கும் காமெடி வரும் என நகைச்சுவையில் கலக்கிய 5 நடிகைகள்.. தேங்காய் சீனிவாசனை அலறவிட்ட சௌகார் ஜானகி

திரைப்படங்களில் காமெடி, வில்லன் போன்ற கேரக்டர்களுக்கு என்று தனித்தனியாக நடிகர்கள் இருந்த காலம் மாறி இப்போது ஹீரோக்களே எல்லா கதாபாத்திரங்களையும் பக்காவாக செய்து விடுகின்றனர். அவர்களுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் ஹீரோயின்களும் அனைத்து கேரக்டர்களிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் எங்களுக்கும் காமெடி வரும் என நகைச்சுவையில் அசத்திய ஐந்து ஹீரோயின்களை பற்றி இங்கு காண்போம்.

ஊர்வசி 80 காலகட்ட சினிமாவில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர்தான் ஊர்வசி. ஹீரோயினாக நடித்தாலும் அதில் நகைச்சுவை உணர்வை கலந்து நடிப்பது தான் இவருடைய சிறப்பு. அந்த வகையில் மைக்கேல் மதன காமராஜன், முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல திரைப்படங்களை உதாரணமாக சொல்லலாம். தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் அதிலும் காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Also read:ரஜினிக்கு இன்னும் கொட்டிக் கொடுக்கும் 5 படங்கள்.. டிவியில் போடுவதற்கு இவ்வளவு கோடிகளா

கல்பனா பாக்யராஜ் இயக்கி, நடித்த சின்னவீடு திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடித்திருந்த இவருடைய காமெடி அலப்பறை நிச்சயம் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

ரேவதி 80 காலகட்டங்களில் முன்னணி ஹீரோயினாக இருந்த ரேவதி பல அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். உணர்வுபூர்வமான கேரக்டர்கள் மட்டுமில்லாமல் இவர் நகைச்சுவையிலும் பின்னிப் பெடல் எடுத்துள்ளார். அந்த வகையில் அரங்கேற்ற வேளை, மகளிர் மட்டும் போன்ற திரைப்படங்களில் இவருடைய காமெடி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

Also read:டிரெய்லரிலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய 6 படங்கள்.. ரிலீசில் மண்ணை கவ்விய அஜித்

சௌகார் ஜானகி எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் ரஜினியுடன் இணைந்து தில்லுமுல்லு திரைப்படத்தில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க காமெடியாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தில் இவர் ஆள்மாறாட்டம் செய்து தேங்காய் சீனிவாசனையே அலற விடுவார். அதில் அவருடைய உடல் மொழியும், காமெடியும் ரசிகர்களை ரொம்பவும் இம்ப்ரஸ் செய்தது.

அம்பிகா ரஜினி, கமல் போன்ற பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அம்பிகா ஒரு காலகட்டத்திற்கு பிறகு அம்மா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் இவர் சில திரைப்படங்களில் காமெடியிலும் கலக்கி இருக்கிறார். அந்த வகையில் வடிவேலு, மணிவண்ணன் ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் இவர் காமெடி செய்திருக்கிறார்.

Also read:மனோரமா இடத்தை பிடிக்க வந்த 5 நடிகைகள்.. கடைசி வரை அசைக்க முடியாமல் ஆட்சி செய்த ஆச்சி

Trending News