வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கால் சீட் சொதப்பாத 5 நடிகைகள்.. பஞ்சுவாலிட்டிக்காகவே 6 படங்கள் புக்கிங் ஆன ப்ரியா நடிகை

எத்தனையோ முன்னணி நடிகைகள் இருந்தாலும் சில நடிகைகள் அவர்களுக்கு கொடுக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி நடித்து வெற்றி பெற்று வருகிறார்கள். அதிலும் சில நடிகைகள் படங்களில் கமிட் ஆகி கால் சீட்டில் சொதப்பாமல் சரியான பஞ்சுவாலிட்டிக்கு படங்களில் நடித்து கொடுக்கிறார்கள். அந்த நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

சாய் பல்லவி: இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போற்ற மூன்று மொழி படங்களிலும் நடித்து தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இவர் மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள், கார்க்கி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வருகிறார். இவர் கேரக்டர் பொதுவாக எந்தவித பந்தாவும் காட்டாமல் தன்னுடைய வேலை என்னவோ அதை மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு இருப்பது தான் இவருடைய மிகப்பெரிய சிறப்பு. இவரை நம்பி எந்த படங்களிலும் புக் பண்ணலாம் என்று தோன்றும் அளவிற்கு பொறுப்பான நடிகையின் கூட. தற்போது இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

Also read: சாய் பல்லவிக்கு ஆடிக்ஷனில் நடந்த டார்ச்சர்.. வெறுத்துப் போய் நடிக்க மறுத்த பரிதாபம்

பிரியா பவானி சங்கர்: இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓமனப் பெண்ணே, பத்து தல போன்ற படங்களில் நடித்து நடிகை என்ற முத்திரையை பதித்து விட்டார். இவர் பொதுவாகவே எந்த படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் அந்த படங்களில் பஞ்சுவாலிட்டியை சரியாக செய்யக்கூடியவர். அந்த ஒரு காரணத்துக்காகவே இவரை தேடி பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது இவர் டிமான்டி காலனி 2, வரிக்குதிரை, இந்தியன்2, பொம்மை போன்ற படங்களில் கமிட்டாய் இருக்கிறார்.

த்ரிஷா: இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார். சினிமாவிற்கு 20 வருடங்களுக்கு மேலாகியும் இவருக்கான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் தவிர இவரை வெறுப்பவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். அத்துடன் இவருக்கு வரும் பட வாய்ப்புகளில் முக்கியமான கதாபாத்திரமாக தான் இவரை தேடி வருகிறது. இவர் நடிக்கும் எந்த படங்களாக இருந்தாலும் அந்த படங்கள் ஹிட் ஆகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தற்போது இவர் லியோ, தி ரோடு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Also read: விஜய்க்கு வலை வீசும் இளம் நடிகை.. த்ரிஷாவை ஓரம் கட்ட வரும் 19 வயசு செல்லமான ஹீரோயின்

அனுஷ்கா ஷெட்டி: இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். எந்தவித அலட்டலும் இல்லாமல் நடித்து ஒரு டீசண்டான நடிகை என்று மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். ஆனால் இவர் பாகுபலி படத்திற்குப் பிறகு எந்த படங்களும் சரியாக பட வாய்ப்பு அமையாமல் தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஆனால் இவருடைய படங்களுக்காக ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாணி போஜன்: இவருடைய நடிப்பின் திறமைக்கு இவரை தேடி பல படங்கள் குவிந்து வருகிறது. இவர் தமிழில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் பரிச்சயமான நடிகையாக மாறினார். அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். அதனால் இவருக்கு தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தேடி வருகிறது. தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திரைவா போன்ற பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

Also read: அப்படி மட்டமா என்னால நடிக்க முடியாது.. ஜிவி பிரகாஷ் படத்தை ரிஜெக்ட் செய்ய வாணி போஜன் கூறிய காரணம்

Trending News