வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

40 வயதில் பாலிவுட் கேரியரை தொடங்கிய 5 நடிகைகள்.. கபூர் குடும்பத்தின் மருமகளாக கலக்கிய ஸ்ரீதேவி

5 actresses: தன் நடிப்பு திறமையால், தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட ஹீரோயின்கள் ஏராளம். அவ்வாறு திருமணத்திற்கு பிறகும் நடிப்பை கைவிடாது, 40 வயதில் பாலிவுட் கேரியரை தொடங்கிய 5 நடிகைகள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

ஹேமமாலினி: முன்னாள் நடிகையாகவும், சிறந்த நடன கலைஞராகவும் திகழ்ந்தவர் ஹேமமாலினி. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் சுமார் 150 இருக்கும் மேற்பட்ட படங்களில் தன் நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். அவ்வாறு ஹிந்தி மொழி படங்களில் கொடி கட்டி பறந்த ஹீரோயின் ஆவார். மேலும் பாரத ஜனதா கட்சி எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Also Read: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நிறுவனம்.. காற்றில் பறந்த வாக்குறுதி, வாய்க்கு பூட்டு போட்ட கமல், ரஜினி, விஜய், சூர்யா

ஜெயப்பிரதா: ஆந்திராவில் பிறந்த இவர் தெலுங்கு மொழி படங்களை தாண்டி தமிழ், ஹிந்தி படங்களிலும் முன்னணி கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் தமிழ் படங்கள் ஆன மன்மத லீலை, தசாவதாரம், கேணி போன்றவை ஆகும். தெலுங்கில் கமலுடன் இணைந்து இவர் நடித்த படம் தான் சாகர சங்கமம். சுமார் 500 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது. அதிலும் குறிப்பாக இவர் ஹிந்தி மொழி படங்களில் அதிகம் நடித்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி: இவரின் முதல் படம் பாலச்சந்தரின் மூன்று முடிச்சு. அதன்பின் ஆரம்ப காலத்திலேயே ரஜினி, கமலுடன் இணைந்து நடித்த பெருமையை கொண்டவர். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர். அதன்பின் 80களில் இவர் மேற்கொண்ட ஹிந்தி படங்கள் மாபெரும் வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து முதல் பெண் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர்.  மேலும் அதன் பின் போனி கபூரை திருமணம் செய்து பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

Also Read: 35 வருடத்திற்கு முன் கமல் பேசிய அரசியல் படத்தால் இயக்குனர்களான 3 பிரபலங்கள்.. காப்பை வைத்து வித்தை காட்டும் GVM

வித்யா பாலன்: தன் அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் பாலிவுட்டில் கொடி கட்டி பறந்த முன்னணி கதாநாயகி தான் வித்யா பாலன். இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் வெற்றியை கண்டு பல விருதுகளை பெற்றது. மேலும் தமிழில் நேர்கொண்ட பார்வை என்னும் படத்தில் அஜித்தின் மனைவியாய் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்.

ரேகா: ஜெமினிகணேசன் மகளான ரேகா தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் கன்னடம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிபடங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். நடிப்பு மட்டுமல்ல அரசியலிலும் தன் திறமையை நிரூபித்தவர். அதைத் தொடர்ந்து தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு பாலிவுட்டில் செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விஜய்யா, விஜய் சேதுபதியா உண்மையை உளறிய ஜவான் ஸ்டண்ட் மேன்.. அட்லீயின் கோபத்தை சம்பாதித்த பைட்டர்

Trending News