ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வயசானாலும் அழகும் ஸ்டைலும் குறையாமல் இருக்கும் 5 நடிகைகள்.. நதியா போல் இளமையாக ஜொலிக்கும் த்ரிஷா

Beauty and style 5 actresses: திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் என்று சொல்வதற்கு ஏற்ப, திறமையுடன் அழகும் ஸ்டைலும் இருந்தால் அவர்களைத் தேடி எப்பொழுதுமே வாய்ப்பு குவிந்து கொண்டே வரும். அத்துடன் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பும் கிடைக்கும். அப்படி சினிமாவிற்குள் நுழைந்து பல வருடங்களாக ஆகியும் தற்போது வரை இளமையாக சில நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

தமன்னா: ஆரம்பப் படங்களில் இவரை பார்க்கும் பொழுது தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடுவார் என்று நினைத்ததை பார்த்திருக்க மாட்டோம். அந்த அளவிற்கு புள்ள பூச்சியாக தான் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் போகப் போக இவருடைய அழகை மெருகேற்றி சினிமாவில் இவருக்கு என்று ஒரு வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார்.

ஜெனிலியா: தன்னுடைய க்யூட்டான சிரிப்பால் ரொம்பவே ஜாலியாக நடித்து அனைவரும் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். சீரியஸான கேரக்டர் இவருக்கு செட்டே ஆகாது என்று சொல்லும் அளவிற்கு கேஷுவலாக நடிக்கும் திறமை உண்டு. அப்படிப்பட்டவர் கல்யாணம் ஆகி செட்டில் ஆன பிறகும் கூட இப்பொழுது வரை பார்க்க அழகாக இளமையாக இருக்கிறார்.

Also read: ஹீரோயினாக தமன்னா ஜொலித்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. இப்ப ஐட்டம் டான்ஸ்க்கு மட்டும் ஓகே சொல்லும் மில்க் பியூட்டி

காஜல் அகர்வால்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தனித்துவமான நடிப்பை நடித்து இவருக்கான இடத்தை பிடித்து விட்டார். இது போதும் எனக்கு என்பதற்கேற்ப ஒரு கட்டத்திற்கு பிறகு திருமணம் வாழ்க்கையில் புகுந்து குழந்தை பெற்று தற்போது குடும்பம் குட்டிமாக வாழ்ந்து வருகிறார். ஆனாலும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் இவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் பார்க்கும் பொழுது காஜல் அகர்வாலுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு துள்ளலுடன் இருக்கிறார்.

திரிஷா: 40 வயது தாண்டிய நிலையிலும் பருவ மங்கையாக முகத்தில் கோடிக்கணக்கான அழகைக் கொட்டி ஜொலித்து வருகிறார். ஆரம்பத்தில் பார்த்த திரிஷாவை விட தற்போது அழகு கூடிவிட்டது என்பதற்கு ஏற்ப மெருகேற்றி விட்டார். அந்த காலத்தில் 80ல் நடித்த நதியாவை போல திரிஷா அழகும் ஸ்டைலுடன் சுற்றி வருகிறார்.

பூஜா ஹெக்டே: தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா, விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். அதேபோன்று ராம்சரண் மற்றும் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்தார். ஆனாலும் இவருடைய படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை என்பதால் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் வருவதில்லை. இருந்தாலும் இவரிடம் அழகும் இளமையும் ஏக்கசக்கமாக கொட்டி கிடைக்கிறது. ஆனாலும் தற்போது வரை வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை.

Also read: காவாலையா குத்தாட்டத்துக்கு வாங்கியதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. ஒரு நாளைக்கு ஒரு கோடி வாங்கும் தமன்னா

Trending News