ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கமல்ஹாசனின் கலக்கல் காமெடியில் உருவான 5 சூப்பர் ஹிட் படங்கள்.. வயிறு குறுங்க சிரிக்க வைத்த அவ்வை சண்முகி

சினிமாவை வித்தியாசமாக பார்க்கக்கூடிய கமலஹாசன் நடிப்பில் வெளியான அத்தனை படங்களிலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்ட முயற்சிப்பார். அதிலும் இவருடைய நடிப்பில் வெளியான 5 முழு நீள நகைச்சுவை படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் அப்லாட்ஸ் அள்ளிய படமானது.

காதலா காதலா: 1998 ஆம் ஆண்டு வெளியான காதலா காதலா திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் ஒன்றாகும். சங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இத்திரைப்படத்தில் கமலஹாசன் உடன் ரம்பா, சௌந்தர்யா, பிரபுதேவா, எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இப்படத்திற்கு உயிரூட்டி உள்ளனர்.

இந்த திரைப்படத்தை பிஎல் தேனப்பன் தயாரித்து, கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் சிறந்த நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களைக் கொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் அமைக்கப்பட்டது.

Also Read: 5 பேருக்கு எப்பொழுதுமே சிபாரிசு செய்யும் கமல்.. உலகநாயகன் படத்தை பெரும்பாலும் மிஸ் செய்யாத நடிகர்கள்

அவ்வை சண்முகி: இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த அவ்வை சண்முகி, ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலத் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கக்கூடிய படமாக அமைந்தது.

இத்திரைப்படத்தில் கமலஹாசனுடன் மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கமலஹாசன் வயதான பெண்ணாக மாறி காமெடியின் உச்சகட்டத்தை காட்டியிருப்பார். அப்படி பெண் இடத்தில் இருக்கும் போது கமலை ஜெமினி கணேசன் அவரை காதலிப்பது தான் அல்டிமேட்.

Also Read: 90களில் மாஸ் காட்டிய 5 நடிகர்களின் சம்பள பட்டியல்.. கமலை விட 3 மடங்கு அதிகம் வாங்கிய சூப்பர் ஸ்டார்

தெனாலி: 2000 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் கமலஹாசன் தெனாலியாக இலங்கை தமிழர் கதாபாத்திரத்தில் தனது நடிப்பினை கச்சிதமாக நடித்து திரைப்படம் முழுவதும் ரசிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன் உடன் ஜெயராம், தேவயானி, ஜோதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் ஜெயராம் உடன் இவர் நடித்த அனைத்து காட்சிகளும் இப்படத்தில் ரசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

பஞ்சதந்திரம்: 2002ஆம் ஆண்டு இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் உடன் ரம்யா கிருஷ்ணன், சிம்ரன்,ஜெயராம் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம் தான் பஞ்சதந்திரம். இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். பஞ்சதந்திரம் படத்தில் 5 நண்பர்களுக்குள் நடக்கும் கலாட்டா காமெடி அனைவராலும் ரசிக்கக் கூடிய விதத்தில் அமைந்துள்ளது.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்: 2004ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ஒரு சிறந்த நகைச்சுவை திரைப்படமாகும். இப்படம் ஹிந்தி திரைப்படமான முன்னாபாய் எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். திரைப்படத்தில் கமலஹாசன், சிம்ரன், பிரபு, பிரகாஷ் ராஜ், நாகேஷ், கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கமல் சொல்லும் கட்டிப்புடி வைத்தியம் படு பேமஸ் ஆனது. இப்படம்உலகம் முழுவதும் 285 திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது.

Also Read: 2022ல் மெர்சல் செய்த டாப் 5 ஹீரோக்கள்.. அஜித், விஜய்யை ஓரங்கட்டி தண்ணி காட்டிய தமிழ் நடிகர்

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்த ஐந்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆகையால் இந்த 5 முழு நீள நகைச்சுவை படங்கள் இன்றும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்களின் லிஸ்டில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

Trending News