செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

டீச்சராக சக்சஸ் செய்து காட்டிய 5 படங்கள்.. ஜாக் டேனியலுடன் சாட்டையை சுழற்றிய மாஸ்டர் விஜய்

கல்லூரி, பள்ளி ஆசிரியராக முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்தாலும், குறிப்பிட்ட சொல்லக்கூடிய 5 படங்களில் நடித்த பிரபலங்கள் டீச்சர் ஆகவே வாழ்ந்து காட்டினர். அதிலும் மாஸ்டர் படத்தில் ஜாக் டேனியலுடன் சாட்டையை சுழற்றி மாஸ் காட்டிய விஜய் வாத்தியாகவே ரசிகர்களின் மனதில் பதிந்தார்.

மாஸ்டர்: கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வசூல் வேட்டையாடிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருப்பார். இந்த படத்தில் விஜய் முதலில் கல்லூரியில் ஆசிரியராக 24 மணி நேரமும் ஜாக் டானியல் உடனே இருப்பார், அதன்பிறகு சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்லும் தளபதி விஜய் ஜாக் டானியல் உடன் சாட்டையை சுழற்றி வாத்தி வேலையில் மாஸ் காட்டியிருப்பார்.

Also Read: 20 காட்சிகளை வெட்டி எறிந்த சென்சார் அதிகாரிகள்.. மனசாட்சியே இல்லையா எனக் கேட்ட மாஸ்டர் படக்குழு

நண்பன்: கடந்த 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ் கல்லூரியில் முதன்மை ஆசிரியராக நடித்திருப்பார். இவரை வைரஸ் என மாணவர்கள் கிண்டல் செய்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவருடைய வித்தியாசமான நடை, உடை, பேச்சினாலும் டீச்சர் ஆகவே வாழ்ந்து காட்டியிருப்பார்.

நம்மவர்: கண்ணாடி தாடியுடன் கமல்ஹாசன் ஆசிரியராக நடித்த நம்மவர் திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் அவருக்கு நல்லதொரு படம் என பலரால் பாராட்டப்பட்டது. பணக்கார முரட்டு மாணவன் கல்லூரியை அடக்கி ஆழ்ந்து கொண்டிருந்தபோது, அவனை தன் வழிக்கு கொண்டுவந்து கல்லூரியையும் கமலஹாசன் ஆசிரியராக இந்தப்படத்தில் சரிபடுத்தி இருப்பார்.

Also Read: விஜய் நடிப்பில் வெளியாகி மெர்சல் பண்ணிய 8 படங்கள்.. வேறுபரிமாணமாய் இளைய தளபதி உருவான விதம்

முந்தானை முடிச்சு: 1983ஆம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கிய நடித்திருந்த இந்தப் படத்தில் அவர் பள்ளி ஆசிரியராக நடித்திருப்பார். டீச்சராக மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று, இவர் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நடித்து அசத்தியிருப்பார். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்தது.

சாட்டை: 2012ஆம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எந்தெந்த வகையில் எல்லாம், அவர்களது முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதை சமுத்திரக்கனி ஒரு நல்ல ஆசிரியராக இந்தப் படத்தில் நடித்துக் காட்டி இருப்பார். முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் அடுத்த சாட்டை என்று கல்லூரி கதைக்களத்தில் வெளியானது.

இவ்வாறு டீச்சராக வாழ்ந்து காட்டிய சிறந்த  ஐந்து நடிகர்களில் மாஸ்டர் படத்தில் ஜாக் டேனியல் உடன் விஜய் செய்த அட்டகாசம் ரசிகர்களிடம் அவரை வித்தியாசமான ஆசிரியராக காட்டியது.

Also Read: சிம்பு தவறவிட்ட 5 மெகா ஹிட் படங்கள்.. இரண்டு வாய்ப்பை தட்டி சென்ற ஜீவா

Trending News