ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

டி20 வீரர்கள்னா நாங்க தான்.. மற்ற அணிகளுக்கு சவால் விட்டு சிம்ம சொப்பனமாக விளங்கும் 5 இந்தியர்கள்

சமீபத்தில் இந்திய அணி ஒரு 20 ஓவர் தொடரில் கூட தோற்கவில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் தோற்றாலும் கூட மற்ற அனைத்து தொடர்களிலும் வெற்றிபெற்று முதல் தர அணியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறது. அனைத்து பெரிய அணிகளும் பார்த்து நடுங்கக் கூடிய ஒரு அணியாக இந்திய அணி திகழ்ந்து வருகிறது.

குறிப்பாக 5 இந்திய வீரர்களை கண்டு மற்ற அணியினர் மெர்சலாகி வருகின்றனர். அவர்கள் 5 பேரும் இந்திய அணிக்கு ஒரு மேட்ச் வின்னர் ஆக செயல்பட்டு வருகின்றனர். எதிரணி வீரர்களுக்கு இலக்கே இந்த 5 வீரர்கள்தான்.

Also Read: மிரட்டும் 6 கீப்பர்களை கொண்ட இந்திய அணி.. மோங்கியாவையே நம்பி மோசம்போன 90’s காலகட்டம்

சூரியகுமார் யாதவ்: இந்திய அணியின் 360 வீரர். இப்பொழுது எதிரணியினர் பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் இவர் 20 ஓவர் போட்டி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். எந்த திசையில் போட்டாலும் பந்தை பவுண்டரி, சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய திறமை பெற்றவர்.

இஷான் கிஷான்: இவரை இந்த உலக கோப்பையில் எடுத்து இருந்தால் நிச்சயமாக ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். ஏன் இவரை எடுக்கவில்லை என்று தெரியவில்லை. இவருக்கு பதிலாக கேஎல் ராகுலை போட்டு சொதப்பி விட்டனர். இந்திய அணியின் கில்கிறிஸ்ட் இவர்தான்.

Also Read: இந்திய அணிக்குள் விராட் கோலி செய்யும் குழப்பம்.. பிரச்சனை இருப்பது உண்மைதான் போல

ஹர்திக் பாண்டியா: ரோகித் சர்மா இல்லாத இந்திய அணியில் இப்பொழுது கேப்டனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் ஹர்திக் பாண்டியா. இவர் கிரீஸில் நின்றால் போதும் எதிரணி வீரர்களுக்கு ஒரு கலக்கம் ஏற்படும். ஒரு ஓவரில் போட்டியை மாற்றக்கூடிய திறமை படைத்தவர் ஹர்திக் பாண்டியா.

ரவீந்திர ஜடேஜா: இவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இப்பொழுது மருத்துவர் அறிவுரையின்படி ஓய்வில் இருக்கிறார். ஆனால் இவரைக் கண்டும் எதிரணியினர் கொஞ்சம் ஆப்செட் ஆவார்கள். காரணம் இவருடைய பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங். இவரும் அணியில் இருந்தால் எதிரணி இடமிருந்து போட்டியை மாற்றும் திறமை கொண்டவர்.

Also Read: ஓய்வு முடிவில் ஆல்ரவுண்டர்.. ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து இந்திய அணிக்கு அடுத்த அடி

தினேஷ் கார்த்திக்: சமீப காலமாக தோனிக்கு அடுத்தபடியாக போட்டியை முடித்துக் கொடுப்பதில் இந்திய அணிக்கு அபாரமாக செயல்பட்டு வருகிறார் டிகே. முதல் பந்தில் இருந்தே பவுண்டரி. சிக்சர்கள் என அடித்து ஆடக்கூடிய திறமை பெற்ற இவரின் விக்கெட்டை எடுப்பதற்கும் எதிரணியினர் போராடுவார்கள்..

Trending News