ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

3 மணி நேரத்திற்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 5 படங்கள்.. சலிப்புத் தட்டாத நண்பன்

5 Block Buster Hits Films Running Time: தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் மூன்று மணி நேரத்திற்கு குறைவாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று மணி நேரத்திற்கு மேல் எடுக்கப்பட்ட 5 படங்கள் ரசிகர்களுக்கு எந்தவித சலிப்பையும் தட்டாமல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது.

அந்நியன்: சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன படம் தான் அந்நியன். இந்த படத்தில் அம்பி, ரெமோ, அந்நியன் என்ற மூன்று கெட்டப்பில் விக்ரம் மாறி மாறி நடித்து அசத்தினார். இந்த படத்தின் மொத்த நீளம் 3 மணி 1 நிமிடம். ஆனால் 3 மணியை கடந்து ஓடினாலும் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து, ரசிகர்களின் ஃபேவரைட் படமாக மாறியது.

தசாவதாரம்: படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப உலக நாயகன் கமலஹாசன் இந்த படத்தில் 10 கெட்டப் போட்டு அசத்தினார். இவருடைய கெட்டப்பை காட்டுவதற்காகவே படத்தின் நீளம் அதிகமாய் இருந்திருக்கும். தசாவதாரம் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி 4 நிமிடம். இருப்பினும் இந்த படத்தில் இடம் பெற்ற சுவாரசியமான கதைக்களம் ரசிகர்களை சலிப்பு தட்டாமல் பார்க்க வைத்தது.

சிவாஜி: சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தின் மொத்த ரன்னிங் டைம் 3 மணி 7 நிமிடம். பணம் இருந்தால் தன்னுடைய சமூகத்திற்கு மருத்துவத்தையும் கல்வியையும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற கனவை ரஜினி இந்த படத்தில் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்து செய்து காட்டினார். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை இன்றும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது.

Also Read: எம்ஆர் ராதா-வை தண்டிக்க வந்த நீதிபதியே கட்டிப்பிடித்து பாராட்டிய சம்பவம்.. அதுக்குன்னு இப்படியா அசிங்கப்படுத்துவது.?

3 மணி நேரத்தை கடந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்

நண்பன்: என்னதான் இந்த படம் ஹிந்தி ரீமேக் ஆக இருந்தாலும் இதில் நண்பர்களாக இருக்கும் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் அற்புதமாக நடித்துக் கலக்கினார்கள். அதிலும் தளபதி விஜய்யின் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகள் அடித்தூளாக இருந்தது. இந்த படத்தை எத்தனை தடவை வேணாலும் பார்க்கலாம், சலிப்பு தட்டாது. மேலும் காலேஜ், டீன் ஏஜ் கதைக்களத்துடன் வெளியான இந்தப் படம் இளசுகளின் ஃபேவரட் படமாகவே மாறியது. கதை இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி 8 நிமிடம்.

தவமாய் தவமிருந்து: சேரன் இயக்கி நடித்த தவமாய் தவமிருந்து படத்தில் கூட்டுக்குடும்பம் மகத்துவத்தை அழகாக காண்பித்தது. இதில் தந்தை- மகன் பிணைப்பு, குடும்ப உறவுகளின் சிறப்பை வலியுறுத்தினர். இந்த படத்தின் ரன்னிங் டைம் மொத்தமாக 3 மணி 24 நிமிடம். மிக நீளமான படமாக இருந்தாலும் படம் முழுக்க இருந்த சென்டிமென்ட் ரசிகர்களை படத்தின் கதையுடன் ஒன்றாக பிணைத்தது.

Also Read: மன்சூர் அலிகான் போல் வம்பில் சிக்கிய ரஜினி.. உங்க வயசுக்கு இப்படி பேசலாமா தலைவரே.!

Trending News