ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மணிரத்தினம் அறிமுகப்படுத்திய 5 முக்கிய பிரபலங்கள்.. அவரிடமே உதவி இயக்குனராக இருந்து ஹீரோவான மூன்று நடிகர்கள்

தனது தத்ரூபமான மாறுபட்ட கதையம்சம் கொண்ட காதல், தீவிரவாதம், நாட்டு நிலவரம், சாமானிய மக்களின் நிலைப்பாடு மற்றும் பழம்பெரும் புராண கதைகள் ஆகியவற்றோடு நகர்ப்புற வாழ் நடுத்தர மக்களின் பின்னணியில் தரமான படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய படங்களின் மூலம் அறிமுகமாகி உச்சம் பெற்ற 5 பிரபலங்களைப் பற்றியும், மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருந்து நடிகர்களாக மாறிய மூன்று பேரை பற்றியும் பார்ப்போம்.

ஏஆர் ரகுமான்: தற்போது ஆஸ்கார் நாயகனாக உலகெங்கும் உள்ள ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் தான் அறிமுகமானார். 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தில் மணிரத்தினம் ஏஆர் ரகுமானை நம்பி கொடுத்த வாய்ப்பு தான் இப்போது அவர் புகழின் உச்சத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல ரோஜா படத்தில் இடம் பெற்ற அத்துணை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாதவன்: சாக்லேட் பாயாக ரசிகைகளின் மனதை கொள்ளை அடித்த மாதவன், முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு 2000 ஆம் ஆண்டில் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன் போன்ற அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் இவருக்கு வரிசையாக கிடைத்தது. என்னதான் இவர் ஒரு சில படங்களிலேயே அசுர வளர்ச்சி அடைந்தாலும், இவரை அறிமுகப்படுத்திய பெருமை மணிரத்தினத்திற்கே சொந்தம்.

Also Read: வெற்றிமாறனின் சக்சஸ் படத்தை எடுக்க ஆசைப்பட்ட மணிரத்னம்.. விஷயம் தெரிந்து முந்தி கொண்ட சாமர்த்தியம்

அரவிந்த்சாமி: மணிரத்தினத்தின் தளபதி படத்தின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி அடுத்ததாக ஹீரோவாக அறிமுகமானதும் மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் மூலம் தான். இந்த படத்தின் மூலம் வெகு சீக்கிரமே ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற அரவிந்த்சாமி, விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி படமாகவே அமைந்தது. அதிலும் இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநிலம் மற்றும் தேசிய விருதுகளை வாங்கி குவித்தது. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் மணிரத்தினம் தான்.

மதுபாலா: இவர் மலையாளத்தில் முதலில் அறிமுகமாகி, அதன் பிறகு கே பாலச்சந்தரின் அழகன் என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். இருப்பினும் மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தில் கதாநாயகியாக நடித்த பிறகுதான் இவருடைய மார்க்கெட் தாறுமாறாக எகிறியது. அதன் பின் தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கினார்.

நிரோஷா: கருப்பழகியாக தமிழ் சினிமாவில் 80களில் ரவுண்டு கட்டிய நிரோஷா தன்னுடைய சினிமா பயணத்தை மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தான் துவங்கினார். இந்தப் படத்தில் பிரபு, கார்த்திக் இருவரும் எதிரும் புதிருமான கேரக்டரில் நடித்திருப்பார்கள். இவர்களுடன் நிரோஷாவும் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களிடம் வெகு சீக்கிரமே பரீட்சியமானார். அதன் பின் இவருக்கு வரிசையாக டாப் ஹீரோக்களின் படங்களில் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது.

Also Read: சித்தார்த்தின் டக்கரான நடிப்பில் வெளிவர உள்ள 5 படங்கள்.. கமலுடன் போட்ட மாஸ் கூட்டணி

இவ்வாறு ஹீரோ ஹீரோயின்கள் மட்டுமல்ல இவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த மூவர் முக்கிய நடிகர்களாக மாறி உள்ளனர்.

சித்தார்த்: தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய சித்தார்த், முதலில் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கினார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பேருந்தில் செல்லும் பயணியாக சிறு வேடத்தில் தோன்றி இருப்பார். இந்தப் படத்தில் இவரைப் பார்த்த இயக்குனர் சங்கர், அதன் பிறகு பாய்ஸ் படத்தில் முன்னா என்ற ஹீரோ கதாபாத்திரத்திற்கு சித்தார்த் தான் பொருத்தமானவர் என அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார். இவ்வாறு மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன்பின் ஹீரோவாக ரவுண்டு கட்டியவர்களில் சித்தார்த்தும் ஒருவர்.

கார்த்தி: தற்போது மணிரத்தினம் இயக்கிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உச்சத்தில் இருக்கும் கார்த்தி, தனது சினிமா பயணத்தை மணிரத்தினிடம் ஆயுத எழுத்து என்ற படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்ததன் மூலம் துவங்கினார். அதன் பிறகு தான் அவருக்கு அமீரின் பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அடுத்தடுத்த பட வாய்ப்புகளைபெற்ற கார்த்தி இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also Read: ஐஸ்வர்யா ராய் கிரஷ்ஷில் இருந்த 3 தமிழ் சாக்லேட் ஹீரோஸ்.. 90களில் தூக்கத்தை தொலைத்த உலக அழகி

அழகம்பெருமாள்: மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான டும் டும் டும் திரைப்படம் தான் அழகம்பெருமாள் இயக்கிய முதல் படம். அதற்கு முன்பு இவர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். டும் டும் டும் படம் தவிர ஜூட், உதயா போன்ற படங்களையும் அழகம்பெருமாள் இயக்கினார். மேலும் இவர் நடிகராகவும் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர். இவர் முதல் முதலாக மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதன் பின் புதுப்பேட்டை படத்தில் தமிழ்ச்செல்வன், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரவி, கச்சேரி ஆரம்பம் படத்தில் வாசு இப்படி தொடர்ந்து பல படங்களில் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர்.

Trending News