வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாயைக் கொடுத்து வீண்வம்பை விலைக்கு வாங்கிய 5 நட்சத்திரங்கள்.. சர்ச்சையாக வெடித்த ஜோதிகாவின் கரிசனம்

5 Celebrities Controversy Speech: சினிமாவில் இருக்கும் சில பிரபலங்கள் எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பல இடங்களில் அவர்களுக்கு தோன்றிய விஷயங்களை பேசி விடுகிறார்கள். இதை கண்ணு காது மூக்கு எல்லாம் வைத்து நாலா பக்கமும் திரித்துவிட்டு அவர்கள் பேசின பேச்சுக்கு எதிராக சர்ச்சையை சில பேர் கிளப்பி இருக்கிறார்கள். அந்த வகையில் சில நட்சத்திரங்கள் வாயை கொடுத்து வீண்வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். அவர்கள் யார் என்றும் என்ன விஷயத்துக்காக பேசி சர்ச்சையாகி இருக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

ராதா ரவி: நான்கு வருடங்களுக்கு முன் ஒரு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ராதாரவி கலந்து கொண்டார். அப்பொழுது நயன்தாராவை அவதூறாக பேசி இருக்கிறார். அதாவது முன் காலத்தில் எல்லாம் அம்மன் வேஷம் என்றால் கேஆர் விஜயா போன்ற நல்ல நடிகைகளை போடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் தலைகீழாக மாறிப் போய்விட்டது. நயன்தாரா ஒரு படத்தில் பேயாக நடிக்கிறார், இன்னொரு படத்தில் சீதவாகவும் நடிக்கிறார் மற்றும் ஒரு படத்தில் அம்மன் ஆகவும் நடிக்கிறார். இவர் எல்லாம் எப்படி அம்மன் மாதிரி நினைக்க முடியும் என்று சப நாகரிகம் இல்லாமல் நயன்தாராவை தாறுமாறாக பேசி இருந்தார். இதனால் அப்பொழுது அவர் DMK கட்சியில் இருந்ததால் இவரை இட நீக்கம் செய்து விட்டார்கள்.

கோமாளி அஸ்வின்: குக் வித் கோமாளி-யில் போட்டியாளராக நுழைந்த இவர் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் இவருடைய பெர்ஃபார்மென்ஸ் இருந்தது. இதனாலேயே இவருக்கு வெள்ளித்திரையில் படம் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது இவர் விட்ட லூஸ் டாக் ஒன்று மிகவும் சர்ச்சையாகி தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். அதாவது பல இயக்குனர்கள் என்னிடம் வந்து கதை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் போது எனக்கு பிடிக்கவில்லை என்றால் அப்படியே தூங்கி விடுவேன் என்று இயக்குனர்களை மட்டம் தட்டி பேசியதால் மொத்தமாகவே காணாமல் போய்விட்டார்.

Also read: மன்சூரை விட த்ரிஷாவை கொச்சைப்படுத்திய சர்ச்சை நடிகர்.. இதுல குஷ்பு மீனா மானமும் போச்சு

த்ரிஷா: புதுமை புரட்சிப் பெண் என்ற நினைப்பில் திரிஷா பல இடங்களில் இவருடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு விஷயம் தான். அதை ரியலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எப்படி நடிகர்கள் படத்தில் நடிக்கும் போது சிகரெட் தண்ணி அடிக்கிற மாதிரி காட்சிகள் இருக்கிறது . அதே மாதிரி தேவைப்பட்டால் நடிகைகளும் சிகரெட் தண்ணி அடிக்கிற மாதிரி நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த ஒரு விஷயம் சமூகத்துக்கு எதிராக பேசியது என்று இவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழும்பி சர்ச்சையாக வெடித்தது.

காமெடி ஆக்டர் சதீஷ்: பல படங்களில் காமெடி ஆக்டர் ஆக வந்த இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக என்டரி கொடுத்தார். அடுத்ததாக ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்த பொழுது படப் பிரமோஷனுக்காக இவர் மேடையில் சன்னி லியோனே தசா குப்தாவையும் கம்பர் பண்ணி பேசி நடிகையின் இமேஜை டேமேஜ் பண்ணி விட்டார். இதனால் சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்கும் அளவிற்கு வீண்வம்பை விலைக்கு வாங்கி இருந்தார்.

ஜோதிகா: ஹீரோயினாக நடிக்கும் பொழுது இல்லாத அக்கறை குடும்பம் குட்டி ஆனதும் டபுள் மடங்கு ஆகிவிட்டது என்று சொல்லலாம். அந்த வகையில் சசிகுமாருடன் உடன்பிறப்பே என்ற படத்தில் நடிக்கும் பொழுது படப்பிடிப்புக்காக தஞ்சாவூரில் அனைத்து இடங்களுக்கும் சென்றிருக்கிறார். அப்பொழுது அங்கே பார்த்து சில விஷயங்கள் இவருக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அந்த விஷயத்தை விருது வழங்கும் நிகழ்ச்சியில் நன்கொடையாக கோயிலுக்கு வாரி வழங்குவதை விட பள்ளிக்கூடங்களுக்கும் ஹாஸ்பிடலுக்கும் கொடுத்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். இந்த ஒரு விஷயம் இவருக்கு எதிராக சர்ச்சையாக வெடித்தது.

Also read: விஜய்க்கு வராத சங்கம் ஏன் த்ரிஷாவுக்கு மட்டும் வராங்க.? மன்சூருக்காக குரல் கொடுத்த சீமான்

Trending News