புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அமீரை தவறாக பேசிய 5 பிரபலங்கள்.. ஞானவேல் ராஜாவுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டம்

Ameer and Gnanavel Raja: கடந்த சில நாட்களாக அமீர் மற்றும் ஞானவேல் ராஜாவுக்கு இருக்கும் பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகிறது. சாதாரணமாக பிரஸ் மீட்டில் அமீர் பேசும் பொழுது சூர்யா மற்றும் கார்த்தியால் பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் பற்றி சொல்லியிருந்தார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஞானவேல் ராஜா 16 வருடங்களுக்கு முன் நடந்த பிரச்சினையை கொளுத்தி விட்டுட்டார்.

அதாவது பருத்திவீரன் படத்தை பண்ணும் போது பணமோசடியில் ஏமாற்றி விட்டதாக அமீர் மீது ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு வைத்தார். இந்த விஷயம் கேள்விப்பட்டதும் அமீரை பற்றி தெரிந்தவர்கள் அனைவரும் பருத்திவீரன் பண்ணும் போது என்ன நடந்தது என்று நேரடியாக பார்த்திருக்கிறோம். அமீர் மீது எந்த தவறும் இல்லை என்று பல பிரபலங்கள் போர்க்கொடியை தூக்கி சப்போர்ட் செய்து வந்தார்கள்.

இதனை தொடர்ந்து இந்த ஒரு விவாகரம் பெரிய அளவில் வெடித்ததால் சிவக்குமார் இதை நிறுத்த வேண்டும் என்பதற்காக ஞானவேல் ராஜாவை மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார். இதற்கு இடையில் சில பிரபலங்கள் அமீரை பற்றி தவறாக பேசியிருக்கிறார்கள். அதாவது பருத்திவீரன் படம் எடுக்கும் பொழுது அமீருக்கும் கார்த்திக்கும் ஒரு சுமுகமான ஒரு ரிலேஷன்ஷிப் இருந்திருக்கிறது.

Also read: நல்லான் வகுத்ததா நீதி இங்கே வல்லான் வகுத்ததே நீதி.. 17 வருட வலியை கொட்டிய பருத்திவீரன் அமீர்

ஆனால் படத்தை எடுத்து முடிப்பதற்குள் இவர்கள் இருவருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போதிலிருந்து இவர்கள் இருவரும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்பதற்கு ஏற்ப பிரிந்து விட்டார்கள். இதில் தம்பிக்கு சப்போர்ட்டாக சூர்யா அமீரை எதிர்த்து பேசி கேள்வி கேட்டிருக்கிறார். அதனாலயே கார்த்திக்கு பருத்திவீரன் மற்றும் சூர்யாவுக்கு மௌனம் பேசியதே படத்தை எடுத்த பிறகு இந்த கூட்டணி மறுபடியும் சேராமல் போய்விட்டது.

இதில் பிரியாமணியும், அமீருக்கு சப்போர்ட்டாக ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்திருக்கிறார். எத்தனையோ பிரபலங்கள் பருத்திவீரன் படத்தில் என்ன நடந்தது என்று உண்மையே சொல்லி வரும் நிலையில் பிரியாமணி மட்டும் அவர் பக்கத்தில் இருந்து எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்காமல் இருக்கிறார். அடுத்ததாக ஞானவேல் ராஜா இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்ததே இவர்தான்.

இவர் சொல்வதைக் கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கமும் ஜால்ரா அடித்தார்கள். அதுவும் அந்த நேரத்தில் கலைஞர் பெயரை சொல்லிக்கொண்டு அமீரை ஏமாற்றி படத்தை ரிலீஸ் பண்ணி கையெழுத்து வாங்கி விட்டார்கள். இதனாலையே இன்னும் வரை கோர்ட்டு கேஸ் என்று அமீர் அலைந்து வருகிறார். கடைசியில் பணம் பத்தும் செய்யும் என்பதற்கு ஏற்ப தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பக்கம் ஒரு கூட்டமே சேர்ந்து விட்டது.

Also read: களி மண்ணாய் இருந்தவர்களை செப்பு சிலையாய் மாற்றிய அமீர்.. நன்றி கெட்ட உலகமடா?.

Trending News