வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஆண்டவரே சொன்னாலும் நாங்க இப்படித்தான்.. பிக்பாஸில் ஆட்டிடியூட் காட்டிய 5 பிரபலங்கள்

Biggboss: பிக்பாஸ் ஷோ தமிழுக்கு வரப்போகிறது என்றதுமே ரசிகர்கள் குதூகலமானார்கள். அதிலும் கமல் அதை தொகுத்து வழங்குகிறார் என்று தெரிந்ததும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனாலயே முதல் சீசன் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இப்போது 7வது சீசனும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த சீசன் கமலுக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. அந்த அளவுக்கு அவர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார். மேலும் இந்த சீசன் போட்டியாளர்களும் ஆண்டவர் சொல்லும் எதையும் கேட்காமல் தன் போக்கில் ஆடி வருகின்றனர். ஆனால் இதுவரை நடந்த சீசன்களிலும் இப்படிப்பட்ட போட்டியாளர்களும் இருந்திருக்கிறார்கள்.

ஓவியா: முதல் சீசன் போட்டியாளரான இவருக்கு ஆர்மி வைக்கும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. தனக்கு பிடித்ததை மட்டுமே செய்து கெத்து காட்டிய இவர் கமலிடம் கூட பயப்படாமல் பேசுவார். அதனாலேயே இதுவரை நடந்த சீசன்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராக இவர் இருக்கிறார்.

Also read: ரவீனாவுக்கு சூனியம் வச்சிட்டு போன பூமர் ஆண்டி.. பிக் பாஸில் நடக்கப் போகும் எதிர்பாராத டிவிஸ்ட்

ஐஸ்வர்யா தத்தா: இரண்டாவது சீசன் போட்டியாளரான இவர் கடும் வெறுப்புக்கு ஆளானார். திமிராக பேசுவது, நடந்து கொள்வது என இவருடைய அட்ராசிட்டி ஆடியன்ஸை கடுப்பில் ஆழ்த்தியது. கமலிடம் கூட இவர் வாய் துடுக்காக பேசுவார். அதனாலயே ஒரு முறை ஆண்டவர் கோட்டை கழட்டி கீழே போட்டு தன் கோபத்தை காட்டினார்.

பாலாஜி முருகதாஸ்: நான்காவது சீசன் போட்டியாளரான இவருக்கும் ஆரிக்கும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கும். அதேபோன்று ஒருமுறை பாலாஜி, கமலிடமே நீங்க சொன்னா கூட சாரி கேட்க மாட்டேன் என்று கூறி கெடுத்து காட்டினார். அந்த அளவுக்கு இவர் மனதில் பட்டதை தைரியமாக பேசக் கூடியவர்.

ஆயிஷா: ஆறாவது சீசன் போட்டியாளரான இவர் சரியான சண்டைக்கோழி. அதிலும் அசீமை பார்த்து செருப்பை காட்டி பேசியதெல்லாம் பயங்கர வைரலானது. அதேபோன்று கமலிடமே நான் அந்த அர்த்தத்தில் பேசல, நீங்க என்ன தப்பா மக்களுக்கு காட்டிடாதீங்க என முகத்தில் அடித்தது போல் பேசினார். ஆண்டவரையே இந்த பொண்ணு இப்படி பேசிடுச்சே என அப்போது பலரும் வாயடைத்து தான் போனார்கள்.

Also read: இந்த வாரம் கமல் கழுத்தை பிடித்து தள்ளப் போகும் மிக்சர் பார்ட்டி.. தடுமாறும் பிக்பாஸ் ஓட்டிங் நிலவரம்

பிரதீப்: இந்த ஏழாவது சீசனில் நடந்து கொண்டிருக்கும் அமளி துமளி அனைத்திற்கும் சொந்தக்காரர் இவர்தான். மக்களின் அமோக ஆதரவை பெற்ற இவருக்கு கமல் கொடுத்த ரெட் கார்டு பெரும் பிரளயமாக வெடித்தது. ஆனால் பிரதீப் அந்த ரெட் கார்டையே கோலாகலமாக கொண்டாடி ஆண்டவருக்கே பல்பு கொடுத்தார்.

இப்படியாக இந்த ஐந்து போட்டியாளர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறக்க முடியாத சம்பவங்களை செய்திருக்கின்றனர்.

Trending News