வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

கமலுக்கு லக்கி ஜாமாய் இருந்த 5 பிரபலங்கள்.. லோகேஷிடம் கிடாய் கிடப்பதற்கு இதான் காரணமா?.

Actor Kamal: 68 வயதானாலும் இன்னும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக் கூடியவர் தான் உலக நாயகன் கமலஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் மூலம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்து திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். இவர் அடுத்ததாக லோகேஷின் விக்ரம் 2 படத்தில் நடிப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கிறார்.

ஆனால் லோகேஷ் விஜய்யின் லியோ படத்தை முடித்துவிட்டு அதன் தொடர்ச்சியாக ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கப் பார்க்கிறார். ஆனால் கமல் தன்னுடைய விக்ரம் 2 படத்தை எடுக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். எதற்காக உலக நாயகன் லோகேஷிடம் கிடாய் கிடப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.

ஒரு வேளை கமலின் லக்கி ஜாமாய் இருந்த அந்த 5 பிரபலங்களுடன் முன்பு போல் இணைந்தால் அது நிச்சயம் ரசிகர்களுக்கு கொடுத்த ட்ரீட் போல் தான் இருக்கும். அதில் ஒருவர் தான் சங்கீத ஸ்ரீனிவாச ராவ். இவர் ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் என உலக நாயகனின் வெற்றி படங்களில் இணைந்து நடித்தவர்.

கமலஹாசன் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான கிரேசி மோகன் உலக நாயகனுடன் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜர், பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என முழுக்கவே நகைச்சுவையான படங்களில் சேர்ந்து நடித்து காமெடியில் கலக்கினார்கள். இந்த படங்களுக்கு எல்லாம் வசனகர்த்தா கிரேசி மோகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 80களில் கமல் நடித்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதில் இடம்பெற்ற பாடல்களும் தான். அதிலும் கமல்- இளையராஜா காம்போவில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. 16 வயதினிலே தொடங்கி சிவப்பு ரோஜாக்கள், அபூர்வ சகோதரர்கள் என கமலின் ஒவ்வொரு வெற்றி படத்திற்கும் இளையராஜாவின் பாடல்களும் வலு சேர்த்தது.

அதுமட்டுமல்ல கமலை வைத்து இயக்குனர் மௌலி ‘பம்மல் கே சம்பந்தம்’ என்ற காமெடி படத்தை இயக்கி அதில் அவருடன் இணைந்து நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இதன் தொடர்ச்சியாக கமலுக்கு லக்கி இயக்குனராக இருந்தவர் கேஎஸ் ரவிக்குமார். அவருடைய இயக்கத்தில் வெளியான தசாவதாரம், தெனாலி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் பெரும்பாலும் கமலின் நகைச்சுவையான நடிப்பை பார்க்க முடியும்.

இவர்களில் கேஎஸ் ரவிக்குமார், மௌலி, இளையராஜா இவர்கள் இருந்தாலும் படங்களில் முன்பு மாதிரி இல்லை. அதனால் கமல் ஸ்டைலில் காமெடி படங்களை பார்க்க முடியவில்லை.

- Advertisement -spot_img

Trending News