புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பொங்கல் டிஆர்பி-காக அடித்துக்கொள்ளும் 5 சேனல்கள்.. டிவியில் ஒளிபரப்பாக உள்ள மொத்த படங்களின் லிஸ்ட்

இந்த பொங்கலுக்கு விஜய் அஜித்தின் வாரிசு, துணிவு படம் மோதலை போலவே முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப போகும் படங்களின் மோதலும் போட்டிப்போட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சிகள் தாங்கள் வாங்கியுள்ள படங்களை ஒளிபரப்ப போகிறார்கள் எந்த டி.வியில் என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

சன் டிவி: பண்டிகை என்றாலே சான் டிவி.தான் பலரது வீடுகளில் காலையில் எழுந்தவுடன் வைத்து பார்க்கும் சேனல். அந்த அளவுக்கு நிகழ்ச்சிகள் படங்கள் என ரகரகமாய் விளம்பரம் செய்து ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தும். அதன்படி ஜனவரி 15 பொங்கலன்று மாலை 6.30 மணிக்கு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படமும், ஜனவரி 16 ஆம் தேதி மாட்டு பொங்கலன்று மாலை 6.30 மணிக்கு விஷாலின் லத்தி திரைப்படமும் ஒளிபரப்பபட உள்ளது.

Also Read: டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

விஜய் டிவி: ரியாலிட்டி ஷோக்களில் புகழ் பெற்ற இந்த தொலைக்காட்சி பொங்கலன்று விஜய் டிவி பிரபலங்களை வைத்து பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது. மேலும் ஜனவரி 15 பொங்கலன்று காலை 10.30 மணிக்கு விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், மதியம் 2 மணிக்கு இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த காந்தாரா, மாலை 4 மணிக்கு ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் பிரம்மாண்ட படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.

மறுநாள் மாட்டுப்பொங்கலன்று காலை 10.30 மணிக்கு அருண் விஜய் மற்றும் அவரது மகன் இணைந்து நடித்த ஓ மை டாக், மதியம் 12.30 மணிக்கு கார்த்தியின் விருமன், மாலை 4.00 மணிக்கு கமலின் விக்ரம் படம் ஒளிபரப்பப்பட உள்ளது.

கலைஞர் டிவி : பல வருடங்களாக புது படங்களை வாங்க கூட முடியாமல் திணறிய கலைஞர் டிவி தற்போது உதயநிதியால் பல படங்கள் தானாகவே சேனலின் கையில் வந்து விழுகிறது. இதனிடையே பொங்கலன்று மதியம் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த லவ் டுடே படம் ஒளிபரப்பப்பட உள்ளது. அடுத்த நாள் மாலை 6.30 மணிக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ஒளிப்பரப்பப்பட உள்ளது.

Also Read: விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

கலர்ஸ் தமிழ்: ஒன்னு, ரெண்டு சீரியலை வைத்து சேனல் நடத்தி வரும் கலர்ஸ் தமிழ் டிவி, இந்தாண்டு பொங்கலுக்கு அதர்வாவின் ட்ரிகர் படத்தை ஒளிபரப்ப உள்ளது. இந்த படம் ஜனவரி 15 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பட உள்ளது.

ஜீ தமிழ்: விஜய் டிவிக்கு டப் கொடுத்து வரும் ஜீ தமிழ் இந்தாண்டு பொங்கலுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புது படங்களை ஒளிபரப்ப தயாராகவில்லை. நடிகர் சசிகுமாரின் நடிப்பில் எப்போது இந்த படம் வெளியானது என தெரியாத அளவிற்கு ரிலீசான காரி படத்தை, வரும் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.

Also Read: பார்லரில் ராதிகாவை மிரட்டிவிட்ட பாக்யா.. டிஆர்பி-யை ஏற்றுவதற்காகவே விஜய் டிவியின் வில்லத்தனம்

Trending News