சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

புத்தாண்டுக்கு புது படங்களை வெளியிடும் 5 சேனல்கள்.. சன் டிவி டிஆர்பி உடைக்க வரும் விஜய் டிவி

New Year Movie Telecast on Channels: ஒவ்வொரு புது படங்களும் ஏதாவது பண்டிகை தினத்தை முன்னிட்டு திரையரங்குகளை அலங்கரித்து விடும். அதற்கு காரணம் அவர்களுக்கு கிடைக்கும் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் தியேட்டர்களில் போய் படத்தை பார்ப்பார்கள். அதன் மூலம் படத்தின் வசூலை அள்ளிவிடலாம் என்று ஒரு எண்ணம் இருக்கும்.

அதுபோலவே வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கும்படி சமீபத்தில் வெளிவந்த படங்களையும் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வெளியிடுவார்கள். அந்த வகையில் நாளை பிறக்கிற புது ஆண்டை முன்னிட்டு சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலைஞர் டிவி போட்டி போட்டுக் கொண்டு புது படங்களை வெளியிட தயாராகி விட்டார்கள்.  டிஆர்பி ரேட்ங்கில் எப்பொழுதுமே சன் டிவி தான் கிங்காக இருக்கும். ஆனால் தற்போது இதை உடைத்தெரிக்கும் விதமாக விஜய் டிவியில் புதுப்படங்களை ஒளிபரப்பாக போகிறார்கள்.

Also read: ஜனனியின் அப்பா எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி.. அப்பத்தாவிற்கு ஆப்பு வைக்க போகும் நாச்சியப்பன்

விஜய் டிவி: புத்தாண்டுக்கு முதல் நாளான இன்றைக்கு துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கிங் ஆஃப் கோதா மதியம் 3 மணிக்கு மற்றும் நாளை காலை 10 மணிக்கு சந்தானம் நடிப்பில் வெளிவந்த கிக் படமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சன் டிவி: புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை 10 மணிக்கு சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த சிங்கம், அடுத்ததாக மதியம் 3 மணிக்கு தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு மற்றும் மாலை 6.30க்கு லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2 படமும் ஒளிபரப்பாக போகிறது.

கலைஞர் டிவி: நாளை காலை 10 மணிக்கு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கட்டா குஸ்தி, 3 மணிக்கு பீட்சா 3 தி மம்மி படமும் வருகிறது.

கலர்ஸ் டிவி: நிவேதா பெத்துராஜ், ராகுல் ப்ரீத் சிங், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த boo என்கிற படம் ஒளிபரப்பாக போகிறது.

ஜீ தமிழ்: காஜல் அகர்வால், யோகி பாபு நடித்த கோஷ்டி படமும், சந்தானத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான டிடி ரிட்டன்ஸ் படமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Also read: இருக்க டிஆர்பி-யவே காப்பாத்த முடியல, இதுல இன்னொரு சீரியலா.? விஜய் டிவியின் பரிதாபங்கள்

Trending News