வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

2022-ல் திடீரென்று மரணித்த 5 சினிமா பிரபலங்கள்.. காலத்தால் மறக்க முடியாத படங்களை தந்த பிரதாப் போத்தன் மறைவு

தென்னிந்திய சினிமாவில் படத்தின் வெற்றி ஆனது ஹீரோக்களால் மட்டுமல்லாமல் காமெடி மற்றும் வில்லன்கள் முக்கிய பங்கு உண்டு. இதில் தவிர்க்க முடியாத சில பிரபலங்ககள் இந்த வருடம் திரைத்துறையை மட்டுமல்லாமல் உலகத்தை விட்டு சென்றுவிட்டனர்.

பிரதாப் போத்தன்: இவர் திரைப்பட நடிகர், இயக்குனர், எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். முக்கியமாக மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அழியாத கோலங்கள், மூடுபனி, இளமைக் கோலம், பன்னீர் புஷ்பங்கள் என்று தொடர்ந்து நெஞ்சில் நிற்கும் படங்களாக நடித்து வந்தார். 1985 இல் இவர் இயக்கத்தில் “மீண்டும் ஒரு காதல் கதை” திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதோடு சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருதினையும் பெற்று தந்தது.

இவர் தமிழை விட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவர் ஹீரோ கதாபாத்திரங்களை விடவும் குணச்சித்திரம் மற்றும் சிறப்பு தோற்றங்களில் தோன்றி தனது நடிப்பு திறமையால் இன்றளவும் திரைத்துறையில் நிலைத்து நிற்கின்றார். இவர் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான கமலி ஃப்ரம் நடுக்காவேரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காலத்தால் அழியாத பொக்கிஷமான பல படங்களை கொடுத்த இவர், இந்த ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் தனது 70 வது வயதில் இயற்கை எய்தினார்.

நடிகர் பிரதாப் போத்தன்

prathap-cinemapettai
prathap-pothen-cinemapettai

Also Read: திருமணமாகி பிரிந்த 10 பிரபல ஜோடிகள்.. பிரதாப் போத்தன் முதல் நாக சைதன்யா வரை

பூ ராமு: 2008 ஆம் ஆண்டு வெளியான பூ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக ஜாதி எதிர்ப்பு திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பார். அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தான் நடித்த படங்களின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை ஒரு நடிகனாக நிலை நிறுத்தியுள்ளார். இவர் நடிப்பில் பூ, நீர்ப்பறவை, சூரரை போற்று, பரியேறும் பெருமாள், கர்ணன், தங்க மீன்கள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்த ஆண்டு ஜூன் 27ஆம் நாள் மாரடைப்பு காரணமாக காலமானார்.

நடிகர் பூ ராமு

poo-ramu-cinemapettai
poo-raamu-cinemapettai

சிவ நாராயணமூர்த்தி:தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வடிவேலு விவேக் உடன் ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். இதுவரை 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் பட்டுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்ப காலகட்டத்தில் தனது நகைச்சுவை பேச்சால் மறைந்த நடிகரும் இயக்குனருமான விசுவின் அரட்டை அரங்க நிகழ்ச்சியின் மூலம் முதல் முதலாக தனது திறமையை வெளிப்படுத்திய நிலையில் விசுவின் “பூந்தோட்டம்” என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்டா பல நடிகர்களுடன் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இவர் இந்த மாதம் 7 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

நடிகர் சிவ நாராயணமூர்த்தி

siva-narayanan-cinemapettai
siva-narayanan-cinemapettai

Also Read: மூன்று முறை திருமணம் செய்த 6 பிரபலங்கள்.. அப்பவே லட்சுமிக்கு டஃப் கொடுத்த ராதிகா

சலீம் கவுஸ்: இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வில்லன் நடிகர்களில் ஒருவராக இருந்தவர். திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் தற்காப்பு கலை நிபுணரும் ஆவார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது நடிப்பையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும் கூட. இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ரெட், வேட்டைக்காரன், தாழ்வாரம், தாஸ், சின்ன கவுண்டர், வெற்றி விழா, திருடா திருடா போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் மிக குறைந்த படங்களே வெளியானாலும் வேட்டைக்காரன் படத்தில் “வேதநாயகம்” என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இன்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தனது 70 வது வயதில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் உடல் நலக்குறைவால் காலமானார்.

நடிகர் சலீம் கவுஸ்

salim-cinemapettai
salim-cinemapettai

ஹரி வைரவன்: வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நடிகர்கள் ஹரி வைரவன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் காமெடி காட்சிகளிலும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார். அதிலும் வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் சூரி உடன் வைரவன் நடித்துள்ளார்.

இதில் 50 பரோட்டாக்களை சாப்பிட்டால் சாப்பிட்ட பரோட்டாவிற்கு காசு கொடுக்க வேண்டாம் அதற்கு பதிலாக ஹோட்டல் நிர்வாகமே காசு கொடுக்கும் என்று படத்தில் வரும் ஒரு காட்சியில் சூரியும் ஹரி வைரவனும் நடித்த காட்சி இன்றளவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் வடிவில் உலா வந்து கொண்டிருக்கிறது. சில காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான வியாதிகளுடன் பார்ப்பதற்கு வித்தியாசமாக காணப்படுகிறார். இந்நிலையில் ஹரி வைரவன் இந்த மாதம் டிசம்பர் 3 நாள் உடல் நலக்குறைவால் காலமானார்.

நடிகர் ஹரி வைரவன்

hari-cinemapettai
hari-cinemapettai

தவசி: தமிழ் சினிமாவில் கிழக்கு சீமையிலே படத்தின் மூலம் அறிமுகமாகி பல திரைப்படங்களில் துணை நடிகராக பல நடிகர்களோடு முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சிவகார்த்திகேயனோடு “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் சூரிக்கு அப்பாவாக குறி சொல்பவர் ஆகவும் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன், நாடோடிகள் 2 போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கிராமத்து மனிதர், கோவில் பூசாரி, குறி சொல்பவர் போன்ற கதாபாத்திரங்கள் எளிதாக இவருக்கு பொருந்தக்கூடிய வகையில் அமைந்துள்ளதால் மக்களுக்கு பரிச்சயமான நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இவர் சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்றவர். அதுமட்டுமல்லாமல் உடலையும் குஸ்தி வீரர் போல் நன்கு வைத்திருந்தார். இந்நிலையில் சில காலமாகவே உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இந்த வருடம் நவம்பர் 23ஆம் நாள் காலமானார்.

நடிகர் தவசி

thavasi-cinemapettai
thavasi-cinemapettai

Also Read: கைவிட்ட நடிகர்கள், பணம் இல்லாமல் இறந்து போன வெண்ணிலா கபடி குழு நடிகர்.. பப்ளிசிட்டிக்காக இரங்கல் தெரிவித்த கேவலம்

இவ்வாறு இந்த 5 பிரபலங்களும் இன்று உலகத்தில் இல்லாமல் போனாலும் இவர்களின் நடிப்பு மூலம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள். அதிலும் காலத்தால் அழியாத பொக்கிஷமான படங்களை கொடுத்த பிரதாப் போத்தன் மறைவு பலரையும் கலங்க வைத்தது.

Trending News