வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வில்லத்தனத்தை மறந்து நாசர் லூட்டி அடித்த 5 காமெடி படங்கள்.. குலுங்க குலுங்க சிரிக்க வைத்த அவ்வை சண்முகி

கமலுடன் குருதிப்புனல், தேவர்மகன் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டி விட்ட நடிகர் நாசர் காமெடி நடிகராக 5 படங்களில் நடித்து கலக்கி இருப்பார். அதிலும் அவ்வை சண்முகியில் கமலுடன் இவர் அடித்து லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

அவ்வை சண்முகி: 1996 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் உடன் மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் கமலஹாசன் வயதான பெண்கதாபாத்திரம் உள்ளிட்ட 2 வேடத்தில் நடித்து கலக்கி இருப்பார். இவருடன் நாசரும் ஊமை வேடத்தில் நகைச்சுவையாக நடித்து கலக்கி இருப்பார். இந்த வாய்ப்பை கமல் தான் நாசருக்கு வாங்கி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: வில்லனாக பார்த்த நாசரை வேற பரிணாமத்திற்கு மாற்றிய உலக நாயகன்.. எல்லாப் புகழும் கமலுக்கே

சந்திரமுகி: 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நாசர், ஜோதிகா, வடிவேலு, பிரபு உடன் நாசர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதில் வடிவேலு-நாசரின் அல்டிமேட் காமெடி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்: 2010 நகைச்சுவை படமாக சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், சந்தியா, லட்சுமி ராய், நாசர் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருப்பார்கள். இதில் வித்தியாசமான கெட்டப்பில் நாசர் கிழக்கு கட்டை என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி ரசிகர்களை கலகலப்பாக்கினார். அதிலும் இவ்வளவு நாள் வில்லனாக பார்த்த நாசரை காமெடி கேரக்டரில் தன்னுடைய வித்தியாசமான பரிமாணத்தை வெளிக்காட்டி அசத்தி இருப்பார்.

Also Read: குழந்தை பெற்றதால் வாய்ப்பை இழந்த 3 நடிகைகள்.. கமலே வேண்டாம் என விரட்டி விட்ட நடிகை

வேட்டை: லிங்குசாமி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலாபால் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருப்பார்கள். இவர்களுடன் போலீஸ் கெட்டப்பில் தம்பி ராமையாவும், டிஜிபி ஆக நாசரும் இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார்கள்.

சேட்டை: 2013 ஆம் ஆண்டு ஆர்யா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா இவர்களுடன் நகைச்சுவையான வில்லன் கதாபாத்திரத்தில் நாசர் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். பல படங்களில் கொடூரமான வில்லனாக பார்த்த நாசரை கோமாளித்தனமான வில்லனாக பார்ப்பதற்கே நகைச்சுவையாக இருந்தது.

Also Read: பெரிய தலைகள் சேரும்போது நறுக்குன்னு குத்தி விட்ட கமல்.. 25 வருடத்திற்கு பிறகு உலக நாயகனுக்கு அடித்த லக்

இவ்வாறு இந்த 5 படங்களிலும் தன்னை ஒரு காமெடியனாக பரிமாற்றம் செய்து கொண்ட நாசர், அந்தப் படங்களுக்கு தன்னுடைய நடிப்பினால் கூடுதல் வலுவையும் சேர்த்தார். அதிலும் அவ்வை சண்முகையில் ஊமையாக நடித்து காமெடியை வெளிப்படுத்துவதில் கமலுக்கே டஃப் கொடுத்திருப்பார்.

Trending News