சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அதிக சம்பளம் வாங்கும் 5 கிரிக்கெட் வீரர்கள்.. பென்ட்லி, ஆடி நிறுவனம் எல்லாம் இவங்க பாக்கெட்டில்

நம்மில் பலருக்கு 5 இலக்க சம்பளம் என்பது ஒரு பெரிய கனவு. அதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சிலர் அதை எளிதில் அடைந்துவிடுவார்கள். இந்தியா போன்ற நாடுகளில் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள. குறிப்பாக கிரிக்கெட் விளையாடுபவர்கள் எளிதில் பல கோடிகளை சம்பளமாக பெறுவார்கள். அப்படி இந்திய வீரர்கள் மட்டுமல்லாது உலகத்தில் உள்ள 5 பணக்கார மற்றும் அதிக சம்பளம் பெறும் வீரர்களை இதில் பார்க்கலாம்.

விராட் கோலி: இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி கிரிக்கெட் விளையாடுவதற்கு மட்டுமே பிசிசிஐயினால் ஆண்டுக்கு 17 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார். அதுமட்டுமின்றி இவருக்கு ஸ்பான்சர் பண்ணும் கம்பெனிகள் ஏராளம். அதில் பென்ட்லி, ஆடி போன்ற பெரிய பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கிறது. இதன் மூலமும் இவர் பல கோடிகள் வருமானம் ஈட்டுகிறார்.

டியன் எல்கர்: தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனான இவர் ஆண்டுக்கு 8 கோடிகள் வரை சம்பளம் பெறுகிறார். அதுமட்டுமின்றி மற்ற விளம்பர கம்பெனியில் இருந்து இவருக்கு 15 கோடிகளுக்கு மேல் வருமானம் வருகிறது.

இயன் மோர்கன்: இங்கிலாந்து அணியின் ஜென்டில்மேன் வீரரான இயான் மோர்கன் ஆண்டுக்கு 7 கோடிகள் பெறுகிறார். ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆண்டுக்கு ஐந்தரை கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கிறார். அதுபோக சில, பல கோடிகள் விளம்பரதாரர் மூலமும் வருகிறது.

ரோகித் சர்மா: அதிகம் சம்பளம் பெறும் லிஸ்டில் 4வது இடத்தில் இருக்கிறார். பல கோடிகள் செலவு செய்து மும்பையில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டியிருக்கிறார். இந்திய வீரர்களின் விராத் கோலிக்கு அப்புறம் அதிகம் சம்பளம் பெறும் வீரர் ரோஹித் சர்மா.இவர் ஆண்டுக்கு 6 கோடிகள் சம்பளம் பெறுகிறார்.

கிரண் பொல்லார்டு: மேற்கிந்திய தீவுகளில் 40 வயது நெருங்கி விளையாடிக்கொண்டிருக்கும் பொல்லார்டு அதிகம் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் சம்பாதிப்பதை விட மற்ற விளம்பர நிறுவனங்களில் இருந்து அதிகம் சம்பாதிக்கிறார். இவர் ஆண்டுக்கு மூன்றரை கோடிகள் சம்பளம் வாங்குகிறார்.

Trending News