செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அப்போ இருந்த சீரியலுக்கும், இப்போ இருக்க சீரியல்களுக்கும் உள்ள 5 வித்தியாசங்கள்.. படுக்கையறை காட்சிகளில் சினிமாவையே மிஞ்சும் சீன்கள்

சின்னத்திரையில் எத்தனையோ சீரியல்கள் இல்லத்தரசிகள் முதல் இளசுகள் வரை பொழுதுபோக்காக அமைந்து வருகிறது. அப்படிப்பட்ட சீரியல்கள் சரியான கதைக்களம், நேர்த்தியான நடிகர்கள் இருந்தால் மட்டுமே சீரியலை ரசித்து பார்க்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போதுள்ள சீரியல்களுக்கும், முந்தைய கால சீரியல்களிலும் பல வேறுப்பாடுகள் காலப்போக்கில் மாறியுள்ளது. அதில் உள்ள 5 வித்தியாசங்களை தற்போது பார்க்கலாம்.

ஓவர் மேக்கப்: சரியாக 10 வருடத்திற்கு முன்பாக வரை ஒளிப்பரப்பப்பட்ட சீரியல்களில் நடிகர், நடிகைகளின் ஒப்பனை மிகவும் எளிமையாகவும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறும் இருக்கும். ஆனால் இப்போதுள்ள சீரியல்களில் சின்ன கதாபாத்திரம் முதல் பெரிய கதாபாத்திரங்கள் வரை முகத்தில் பளிச்சென்று மேக்கப் போட்டு சற்று செயற்கையாகவே காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் தேம்பி, தேம்பி அழும் காட்சிகளில் கூட நடிகர், நடிகைகளுக்கு மேக்கப் குறையாமல் உள்ளது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிறது.

Also Read: ஒரு எபிசோடுக்கு பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா தல சுத்துது

அக்கடு தேசத்து நடிகர்கள்: முந்தைய காலத்து சீரியல்களில் தமிழ் உச்சரிக்க தெரிந்த நடிகர்கள் மட்டுமே தமிழ் சீரியலில் நடிக்க முடியும் என்ற கோட்பாடு இருந்தது. ஆனால் தற்போது வெள்ளித்திரை போலவே சின்னத்திரை நடிகர், நடிகைகளும் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை பேசத்தெரிந்தவர்களாகவே உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் பேசும் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லாததால் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வைத்து சமாளித்து வருகின்றனர்.

தேவையில்லாத வார்த்தைகள்: முன்பிருந்த சீரியல்களில் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு டயலாக்குகளும்
அழுத்தமாகவும் சீரியலுக்கு தேவையான வகையிலே இருக்கும். ஆனால் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் கெட்ட வார்த்தைகள், மரியாதை குறைவான வார்த்தைகள், தாழ்த்தி பேசும் வசனங்கள் சற்று அதிகமாகவே இடம்பெற்று வருகிறது.

Also Read:  மகனைக் காப்பாற்ற திட்டமிட்டு அந்தரங்க கேசில் மாட்டிவிட்ட அம்மா.. சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்

பிரம்மாண்ட வீடுகள்: முன்பெல்லாம் சீரியல்களில் காட்டப்படும் வீடுகள் ஓட்டு வீடு, சரியான பெயிண்ட் கூட அடிக்காத வீடுகள், மேலும் பணக்கார வீடுகளாக இருந்தாலும் ஓவர் ஆடம்பரம் என்பது இருக்காது. ஆனால் தற்போது மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்துவரும் கதாபாத்திரங்களின் வீடுகளே மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு செயற்கையான காட்சியாக மாற்றி வருகின்றனர். இதனை பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை உண்டு பண்ணுகிறது.

படுக்கையறை காட்சிகள்: முன்பெல்லாம் சீரியல்களில் கணவன் மனைவியாக நடிப்பவர்களே வெட்கப்படுவதோடு அவர்களின் ரொமான்ஸ் முடிந்துவிடும். ஆனால் தற்போது ரொம்பவும் எல்லை மீறி சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு முதலிரவு காட்சிகள், முத்தக்காட்சிகள், பார்க்கவே கண் கூசும் ரொமான்டிக் காட்சிகள் தற்போதுள்ள சீரியல்களில் எல்லை மீறியுள்ளது. இதனால் இந்த சீரியல்களை குழந்தைகளுடன் பெரியவர்கள் பார்க்க முடியாத சூழலும் ஏற்படுகிறது.

Also Read: அடுத்தவன் காசுல உல்லாசமாக இருந்த அரசியல்வாதி.. தள்ளாத வயதிலும் சீரியல் நடிகையை தள்ளிட்டு போன கொடுமை

Trending News