சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

கமல் வித்தியாசமான நடிப்பை காட்டிய ஐந்து படங்கள்.. இன்றுவரை மறக்க முடியாத சப்பாணி

உலகநாயகன் கமலஹாசன் எப்போதுமே கமர்சியல் என்பதை தாண்டி தன்னுடைய நடிப்பில் தன்னால் முடிந்த வரை எவ்வளவு வித்தியாசம் காட்ட முடியுமோ அவ்வளவும் காட்ட வேண்டும் என்று நினைப்பவர். அவ்வப்போது ரசிகர்களுக்காக கமர்சியல் படங்கள் பண்ணினாலும் கமலின் தீராத ஆசை என்பது என்னவோ ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு முயற்சியை செய்து பார்க்க வேண்டும் என்பதுதான். அதில் கமல் ரொம்பவும் வித்தியாசமாக நடித்த சில படங்களும் உண்டு.

பதினாறு வயதினிலே: இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன் நடித்த படம் தான் 16 வயதினிலே. இந்த படத்தின் சப்பானி கேரக்டரை தமிழ் சினிமாவால் என்றுமே மறந்து விட முடியாது. வாய் நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டு வெறும் கோமணத்தோடு சுற்றி வரும் அந்த கேரக்டரை எந்த ஹீரோவும் பண்ண தயங்குவார்கள். வளர்ந்து வரும் ஹீரோக்கள் யாருமே பண்ண தயங்கும் அந்த கேரக்டரை கமலஹாசன் பண்ணி இருந்தது சினிமா மீதான அவருடைய தீராத காதலை தான் காட்டுகிறது.

Also Read:ஆண்டவரே களத்தில் இறங்கி தீர்த்து வைத்த பஞ்சாயத்து.. சிம்புக்காக முட்டி மோதும் கமல்

பேசும் படம்: இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பேசும் படம். படத்திற்கு பேசும் படம் என்ற தலைப்பிட்டு விட்டு படம் முழுக்க எந்தவித உரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்டது. இதில் கமலுடன் அமலாவும் இணைந்து நடித்திருப்பார். தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருது என பல விருதுகளை இந்த படம் பெற்றது.

குணா: நடிகர் மற்றும் இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் கமலஹாசன் நடித்த திரைப்படம் தான் குணா. இந்த படத்தில் கமல் மனநிலை பாதிக்கப்பட்டவராக அதே நேரம் கவிதை ஆற்றல் கொண்டவராக நடித்திருப்பார். தான் கனவில் நினைத்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பும் இவர் எதேர்ச்சியாக ஒரு பெண்ணை பார்த்து அவள்தான் தன் கனவு தேவதை என்று அவள் மீது காதல் கொள்வது போல் இந்த படம் அமைந்திருக்கும்.

Also Read:கவுண்டமணியை வெறுத்து ஒதுக்கிய உலகநாயகன்.. இருவரின் விரிசலுக்கு இதுதான் காரணம்

கல்யாண ராமன்: கமலஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கல்யாணராமன். இதில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட இரட்டை வேடப் படங்கள் எல்லாமே இண்டோர் ஷூட்டிங்கில் தான் எடுக்கப்படும். கல்யாணராமன் படம் தான் முதன்முதலில் அவுட்டோர் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட இரட்டை வேடப் படமாகும்.

ஜப்பானில் கல்யாணராமன்: தமிழில் முதன் முதலில் வெளியான பார்ட் 2 திரைப்படம் தான் ஜப்பானில் கல்யாணராமன். 1979 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கல்யாணராமன் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் வெளியானது. இதில் கமல், ராதா, சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் கோவை சரளாவின் நகைச்சுவை காட்சிகள் இன்று வரை பிரபலமாக இருக்கிறது.

Also Read:நடிகர் திலகத்தை தேசிய விருது வாங்காமல் தடுத்த உலகநாயகன்.. காரணத்தை கூறி நெகிழ வைத்த சம்பவம்

- Advertisement -spot_img

Trending News