திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடுத்தடுத்த கமலுடன் கூட்டணி போடும் 5 இயக்குனர்கள்.. பல 100 கோடி முதலீடு செய்ய காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள்

விக்ரம் படம் வெற்றிக்கு பின்னர் உலக நாயகன் கமலஹாசனின் மார்க்கெட் பன் மடங்கு அதிகரித்துள்ளது. முதலில் படங்களை தயாரிப்பதிலும் அரசியலிலும் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்த கமல், இப்போது விக்ரம் படத்திற்கு பிறகு நடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார். இதற்காக கமல் அடுத்தடுத்து 5 இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார். இதை 100 கோடி முதலீடு செய்து தயாரிக்கவும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

சங்கர்: 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் கமலஹாசனுடன் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கின்றார். இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கருடன் இணைந்து மேலும் மூன்று இயக்குனர்கள் இயக்குகின்றனர். அதிலும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, இயக்குனர்களாக மாறிய வசந்த பாலன், சிம்பு தேவன், அறிவழகன் ஆகியோர் இந்தியன்-2 படத்தில் இணைகின்றனர்.

Also Read: கமல்ஹாசனின் கலக்கல் காமெடியில் உருவான 5 சூப்பர் ஹிட் படங்கள்.. வயிறு குறுங்க சிரிக்க வைத்த அவ்வை சண்முகி

எச்.வினோத்: எச் வினோத் இயக்கும் படத்தில் கமலஹாசனுடன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கும் என்றும் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மணிரத்தினம்: பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மணிரத்தினம் கமலஹாசன் இணையும் கூட்டணியாகும். 35 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்தினத்தின் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. 2024 ஆம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

பா.ரஞ்சித்: இயக்குனர் கமல் மற்றும் பா. ரஞ்சித்தின் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் விக்ரம் நடிக்கும் அவரது 61-வது படத்தை பா. ரஞ்சித் இயக்கி முடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பாக கமலை சந்தித்த பா.ரஞ்சித் படத்தின் கதை குறித்து கூறியுள்ளார். இதையடுத்து கமல், உடனடியாக கால்ஷீட் தேதிகளை அளித்திருக்கிறார்.

Also Read: கமலின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போய் கண் கலங்கிய பாலச்சந்தர்.. அப்போதே பயத்தை காட்டிய ஆண்டவர்

வெற்றிமாறன்: கமல் வெற்றிமாறன் கூட்டணி இணையும் படத்தினை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வாடிவாசல் படத்தை முடித்துவிட்டு கமல் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு உலக நாயகன் அடுத்தடுத்து இணையும் 5 இயக்குனர்களின் படங்களும் வரிசையாக உருவாக இருப்பதால் இந்த படத்தைக் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படங்களை தயாரிக்கவும் தயாரிப்பாளர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர்.

Also Read: இந்தியளவில் 2022 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த 100 பாடல்கள்.. மாஸ் காட்டிய விஜய், கமல்

Trending News