திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வெற்றி படங்களை கொடுத்த பின் தேடும்படியாக அமைந்த 5 இயக்குனர்கள்.. மர்மமாய் போன விஷ்ணு விஷாலின் ராட்சசன்

Five Searchable Directors: பொதுவாக சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்றால் அவ்வளவு எளிது கிடையாது. என்னதான் திறமை கொட்டிக் கிடந்தாலும் அதை சரியாகப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதை கண்டுபிடித்து சாதித்துக் காட்டுவது ஒவ்வொரு இயக்குனர்களின் கெட்டிக்காரத்தனம். அப்படி சினிமாவிற்குள் கனவோடு நுழைந்தவர்கள் ஏராளமானவர்.

அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் தங்கவேலு, ஜெயம் ரவியை வைத்து 2018 ஆம் ஆண்டு அடங்கமறு திரைப்படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸிலும் லாபத்தை கொடுத்தது. இதைத் தொடர்ந்து இவர் பல படங்களை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு படத்தோடு காணாமல் போய்விட்டார்.

Also read: தங்கையாக நடித்து பின் ஜோடி போட்ட 5 நடிகைகள்.. ஜெயம் ரவியை கண்ணசைவில் சுத்த விட்ட குந்தவை

அடுத்ததாக இயக்குனர் ராம்குமார், இவர் விஷ்ணு விஷாலை வைத்து ராட்சசன் என்ற படத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கினார். இப்படம் மிகவும் திரில்லர் படமாகவும் அனைவரையும் விரும்பி பார்க்க வைத்த படமாகவும் வெளிவந்தது. அத்துடன் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியாகவும் வசூலை வாரி குவித்தது. தொடர்ந்து இவரிடம் இதே மாதிரி படங்கள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் மர்மமாய் போய்விட்டார்.

அதன் பிறகு இயக்குனர் செல்ல அய்யாவு இவர் விஷ்ணு விஷாலை வைத்து கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தை கடந்த வருடம் இயக்கினார். இப்படம் காதல், விளையாட்டு, நகைச்சுவை என்று பார்க்கவே இன்ட்ரஸ்டிங்காக அமைந்த படம் என்று சொல்லலாம். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று விஷ்ணு விஷாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

Also read: விஷ்ணு விஷாலை டம்மியாக நடிக்க வைக்கும் ஐஸ்வர்யா.. முழுக்க முழுக்க லால் சலாம் படம் சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே

அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி, இவர் சிவகார்த்திகேயனை வைத்து கடந்த வருடம் வெளிவந்த டான் படத்தை எடுத்தார். இப்படம் எதிர்பார்த்த அளவைவிட வெற்றிப்படமாக அமைந்து சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அத்துடன் வணிக ரீதியாகவும் லாபத்தைப் பெற்றுக் கொடுத்தது. ஆனால் அதன் பின் இவரின் அடுத்த படத்தை பற்றி எந்தவித தகவலும் வரவில்லை.

மேலும் இயக்குனர் தமிழ் கடந்த வருடம் விக்ரம் பிரபுவை வைத்து டானாக்காரன் படத்தை இயக்கினார். இப்படம் போலீஸ் பயிற்சி தொடர்பான நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். மேலும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பை பெற்றது. இப்படிப்பட்ட இவர் அடுத்த படத்தை எடுக்காமல் எங்கே போய்விட்டார் என்று தேடும்படியாக அமைந்து விட்டது.

Also read: சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து ஏமாந்துட்டேன்.. கோமண நடிகர் கூறிய பகிர் உண்மை

Trending News