திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

2023ல் அனைவரும் எதிர்பார்த்து ஏமாற்றிய 5 இயக்குனர்கள்.. காக்க வைத்து மோசம் பண்ண பிரம்மாண்ட ஷங்கர்

5 directors films released in 2024: ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அதற்கு காலமும் சூழலும் சரியாக அமையனும். அப்படி அமையாமல் போனால் அந்த செயலை செய்ய முடியாமலே போய்விடும். அப்படி தான் 2023ல் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காக்க வைத்த ஐந்து இயக்குனர்களின் படங்கள் கடைசி வரை ரிலீஸ் ஆகாமலே போனது. அதிலும் சங்கர் நான்கு வருடங்களாக காக்க வைத்து மோசம் பண்ணி விட்டார்.

பாலா: பாலா இயக்கிய வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் நடித்தார். ஆனால் இந்த படத்தில் ஏகப்பட்ட கதை மாற்றத்தை பாலா ஏற்படுத்தியதால், இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்பு அந்த படத்தில் இருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தார். அதன் பின் பாலா, அருண் விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை சூர்யா- பாலா இருவரிடமும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருந்திருந்தால், இந்த வருடத்திலேயே வணங்கான் படம் ரிலீஸ் ஆகியிருக்கும். ஆனால் இப்போது வணங்கான் படம் 2024ல் தான் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஏஆர் முருகதாஸ் : தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கி ஃபேமஸான இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு சமீபத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் அந்தப் படத்தை 2024 ஜனவரி மாதத்தில் தான் துவங்கப் போவதாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.

எதிர்பார்த்து ஏமாற்றிய 5 இயக்குனர்

சிறுத்தை சிவா: சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பில் சிறுத்த சிவா இயக்கத்தில் தயாராகும் படம் தான் கங்குவா. இதனை யூவி கிரியேஷன் நிறுவனமும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து மிகப்பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் தயாராகும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நாளிலிருந்து ரசிகர்களின் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி கொண்டே போகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இந்த வருடத்தில் ரிலீஸ் செய்வார் என நினைத்தனர். ஆனால் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தான் கங்குவா ரிலீஸ் ஆகிறது.

Also read: பொங்கலுக்கு 3 முக்கிய படங்களை பார்த்து ஒதுங்கிய இந்தியன் 2.. ரிலீஸ் செய்தியை லாக் செய்த உதயநிதி

சசிகுமார்: நடிகராகவும் இயக்குனராகவும்  சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமாகி, அந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்தவர் தான் சசிகுமார். இந்த படத்தை தொடர்ந்து ஈசன் படத்தையும் இயக்கினார். இப்போது குற்றப்பரம்பரை நாவலை வெப் தொடராக இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் 2023-ல் இவருடைய படங்கள் எதுவும் வெளிவராமலே போனது.

சங்கர்: பிரம்மாண்ட படங்களை கொடுக்கக்கூடிய இயக்குனர் சங்கர்- கமலஹாசன் கூட்டணியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, லைக்கா நிறுவனத்தில் ஏற்பட்ட ஐடி ரைட், கொரோனா பாதிப்பு என பல பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியா படத்தை முடித்தனர்.

ஆனால் இந்தப் படத்தை இந்த வருடம் எப்படியாவது சங்கர் ரிலீஸ் செய்து விடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றிவிட்டார். கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு தேவையான படப்பிடிப்பை மிகுந்த பொருட்செலவில் சங்கர் எடுத்ததால், இப்போது இந்தியன் 2, இந்தியன் 3 என அடுத்தடுத்து ரெடி செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்தியன் 2 படத்தை 2024 ஏப்ரல் 12ஆம் தேதியும், இந்தியன் 3 படத்தை அடுத்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Also read: சாப்பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டி கமலை அவமானப்படுத்திய விசுவாசிகள்.. இப்பவும் மயில்சாமியை தேட இதுதான் காரணம்

- Advertisement -

Trending News