ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

செல்வராகவன் இயக்கத்தில் படுதோல்வி அடைந்த 5 படங்கள்.. பார்த்து பார்த்து செதுக்கியும் பயனில்லை

இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ஆனால் செல்வராகவன் இயக்கத்தில் சோடைப்போன ஐந்து படங்களை இப்போது பார்க்கலாம்.

ஆயிரத்தில் ஒருவன் : கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் சோழர்களைப் பற்றி எடுக்கப்பட்டது. ஆயிரத்தில் ஒருவன் படம் தோல்வியைத் தழுவியது. ஆனால் அதன் பிறகு ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள்.

Also Read : ரசிகர்கள் கொண்டாட தவறிய படம்.. 2ஆம் பாகத்தை யோசிக்காத செல்வராகவன்

இரண்டாம் உலகம் : செல்வராகவன் இயக்கத்தில் 2013இல் ஆர்யா, அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் இரண்டாம் உலகம். இப்படம் இரு வேறு இணைய உலகில் நடக்கும் கதையை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவியது.

என் ஜி கே : கடந்த 2019 ஆம் ஆண்டு சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பலர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் என்ஜிகே. இப்படம் அரசியல் கலந்த அதிரடி படமாக வெளியானது. ஆனால் சூர்யாவின் திரை வாழ்க்கையில் இப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது.

Also Read : தமிழில் படம் இயக்க பிடிக்கவில்லை.. விரக்தியில் ஆவேசமாக பேசிய செல்வராகவன்

நெஞ்சம் மறப்பதில்லை : 2021 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, நந்திதா, ரெஜினா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தின் கதை சுவாரசியமாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை.

நானே வருவேன் : சமீபத்தில் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் வெளியான திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தில் தனுஷ் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நேர்மையான விமர்சனங்கள் கிடைத்தாலும் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் காரணமாக தோல்வியை தழுவியது.

Also Read : பொன்னியின் செல்வனால் பலத்த அடி வாங்கிய தனுஷ்.. கிடப்பில் போட்ட படத்தை கையில் எடுத்த செல்வராகவன்

Trending News