திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வில்லங்கமாக நடித்து பெயர் வாங்கிய 5 அப்பா கேரக்டர்கள்.. கண்ணீர் விட்டு கதறிய சிவகார்த்திகேயன்

பொதுவாக திரைப்படங்களில் அப்பா கேரக்டர் என்பது ரொம்பவும் பாசிட்டிவாக காட்டப்படும். அதில் விதிவிலக்காக சில அப்பா கேரக்டர்கள் காதலை எதிர்ப்பது, சொத்துக்காக வில்லத்தனம் செய்வது போன்று நெகட்டிவாகவும் காட்டப்படும். ஆனால் சில அப்பா கேரக்டர்கள் கொடூர வில்லனாகவும் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வில்லங்கமான அப்பா கேரக்டர்களில் நடித்த ஐந்து பிரபலங்களை பற்றி இங்கு காண்போம்.

எம் மகன் – நாசர் திருமுருகன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் பரத், நாசர், வடிவேலு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதில் நாசர், பரத்துக்கு அப்பாவாக ரொம்பவும் கோபக்காரராக நடித்திருப்பார். பாசத்தைக் கூட அவர் அடித்து தான் காண்பிப்பார். அப்படிப்பட்ட கேரக்டரில் நடித்ததற்காக நாசர் தமிழக அரசின் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் பாரத் – சத்யராஜ் 1986 இல் வெளிவந்த இந்த படத்தில் ரஜினிகாந்த். சத்யராஜ், அம்பிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதில் சத்யராஜ், ரஜினிக்கு அப்பா கேரக்டரில் நடித்திருப்பார். தன் அம்மாவை காதலித்து ஏமாற்றும் அப்பா சத்யராஜை ரஜினி எப்படி எல்லாம் பாடாய்ப் படுத்துகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இதில் சத்யராஜ் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார்.

பாவ கதைகள் – பிரகாஷ் ராஜ் ஆந்தாலஜி திரைப்படமாக வெளியான இக்கதையை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் அவருக்கு அப்பாவாக நடித்திருப்பார். அப்பாவுக்கு செல்ல பிள்ளையான சாய் பல்லவி வேறு ஜாதியை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறி விடுவார்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பிரகாஷ்ராஜ் மகளை மன்னித்து விட்டதாக கூறி தன் வீட்டிற்கு அழைத்து வருவார். அங்கு அவர் நிறைமாதமாக இருக்கும் சாய்பல்லவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விடுவார். இப்படி ஒரு வில்லங்கமான அப்பா கேரக்டரை இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

டான் – சமுத்திரக்கனி சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் பல கோடி வசூல் சாதனை படைத்தது. இதில் சமுத்திரகனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்திருப்பார். பாசத்தை வெளியில் காட்டாத அவர் மகனை அடித்து வளர்ப்பார்.

ஒரு கட்டத்தில் அப்பாவை வெறுக்கும் சிவகார்த்திகேயன் இறுதியில் அவரை எப்படி புரிந்து கொண்டார் என்பது தான் இப்படத்தின் கதை. ஆரம்பத்தில் வில்லனாக காட்டப்பட்ட சமுத்திரகனியின் கதாபாத்திரம் இறுதியில் கண்ணீரை வரவழைக்கும்.

விருமன் – பிரகாஷ் ராஜ் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் இப்படம் வெளியானது. அதில் பிரகாஷ்ராஜ், கார்த்தியின் அப்பாவாக நடித்திருப்பார். அவரை பிடிக்காத கார்த்தி பல விஷயங்களை செய்து அவரை வெறுப்பேற்றுவார்.

மகனின் தொல்லையை தாங்க முடியாத பிரகாஷ்ராஜ் கார்த்தியின் மீது தீராத வன்மத்தில் இருப்பார். இறுதியில் அப்பா மகன் உறவு எப்படி மாறியது என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தில் பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் பலரின் பாராட்டையும் பெற்றது.

Trending News