சினிமாவில் பல்வேறு விதமான கதையம்சக்கண்ட படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இன்ஜினியரிங் கதையை மையமாக வைத்த சில படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வசூலை அள்ளித் தந்துள்ளது. அந்த வகையில் இன்ஜினியரிங் கதை அம்சம் கொண்ட 5 படங்களை தற்போது பார்க்கலாம்.
மின்னலே : கௌதம் மேனன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு மாதவன், ரீமாசென், அப்பாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மின்னலே. இன்ஜினியரிங் காலேஜில் படிக்கும் மாதவன், அப்பாஸ் இருவருமே எதிரிகளாக உள்ளனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
Also Read :வேதாவை மிஞ்சும் கேங்ஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன்.. மைக்கேல் டீசர் விமர்சனம்
சில்லுனு ஒரு காதல் : சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லனு ஒரு காதல். குடும்பம், குழந்தை என சந்தோஷமாக வாழும் சூர்யாவின் கடந்தகால கல்லூரி காதல் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. இதில் ஒரு இன்ஜினியரிங் ஸ்டுடென்டாக சூர்யா மாஸ் காட்டி இருப்பார்.
நண்பன் : ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நண்பன். இப்படத்தில் இன்ஜினியரிங் காலேஜில் நடக்கும் சம்பவங்களை எதார்த்தமாகவும், சுவாரசியமாகவும் காட்டி இருப்பார்கள். இப்படம் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று தந்தது.
Also Read :16 வருடங்கள் ஏஆர் ரஹ்மானுடன் இணையாத அஜித்.. காரணமான யுவன் ஷங்கர் ராஜா
வேலையில்லா பட்டதாரி : தனுஷ், அமலா பால், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இன்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்கள் தங்களை முயன்ற வேலை செய்யலாம் என்பதை தனுஷ் இப்படத்தில் காட்டி இருப்பார்.
டான் : சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டான். தந்தையின் வற்புறுத்தலுக்காக இன்ஜினியரிங் சேரும் மாணவன் அதன் பின்பு எப்படி தனது வாழ்க்கையை புரிந்து நடந்து செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.