புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவகார்த்திகேயன் லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்.. பழைய ஹீரோகளுக்கு குட் பாய் சொல்லிய ட்ரெண்டிங் இயக்குனர்கள்

Sivakarthikeyan lineup Movies: சினிமாவிற்குள் நுழைந்து பத்து வருஷத்தில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்து அடுத்தடுத்த வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இடம் பிடித்து விட்டார். வாய்ப்பு கிடைக்கும் போது அதை கெட்டியாக பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி வர வேண்டும் என்று சொல்வார்கள். இதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து ஆலமரமாக வளர்ந்து நிற்கிறார்.

அந்த வகையில் 22 ஆவது படமாக கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் முன்னாள் மறைந்த மேஜர் முகுந் வரதராஜன் பயோபிக் கதையில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதுவரை வித்தியாசமான கதையை எடுத்து நடிக்காத சிவகார்த்திகேயன் முதன் முதலாக ஒரு ராணுவ வீரர் கதையில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது.

ஆலமரமாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன்

இதனை அடுத்து SK 23 படமாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் என்வி பிரசாத் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். அத்துடன் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. இப்படத்தில் கதையை முதலில் விஜய் காகத்தான் இயக்குனர் தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் சில சந்தர்ப்பங்களால் சிவகார்த்திகேயனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது.

sk and ar
sk and ar

அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு மிக வெற்றி படமாக கை கொடுத்த டான் படத்தின் இயக்குனர் மற்றும் எஸ்கே வின் நண்பருமான சிபி சக்ரவர்த்தி உடன் கூட்டணியில் இணைந்திருக்கிறார். அந்த வகையில் எஸ்கே 24 ஆவது படத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது சம்பந்தமான கதைகளும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது.

sk and cibi
sk and cibi

இதனை அடுத்து விஜய்க்கு கோட்படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் 25வது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தின் கதை ஆனது வெங்கட் பிரபு ஸ்டைலில் ஜாலியாகவும், எஸ்கேக்கு ஏத்த மாதிரி காதல் ஆக்சன் காட்சிகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோட் படம் ரிலீஸ் ஆன பிறகு வெளியாகும்.

sk and vp
sk and vp

அடுத்ததாக சூர்யா தவறவிட்ட வாய்ப்பான புறநானூறு படத்தில் எஸ்கே அவருடைய 26வது படத்திற்கு சம்மதம் கொடுத்திருக்கார். அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் திருப்புமுனை படமாக இப்படம் நிச்சயம் வெற்றி படமாக அமையப் போகிறது. இவர் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்றால் அதற்கான கதைகள் தான் தரமாக வைத்திருப்பார். ஆனால் அந்த கதையில் தற்போது எஸ்கே நடிக்கிறார் என்றால் நிச்சயம் ஒரு சம்பவத்திற்கு தயாராக தான் இருக்கும்.

sk and sudha
sk and sudha

இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் சைலண்டாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் கூலி படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருவதாக பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய கனவே ரஜினி கூட நடிக்க வேண்டும் என்பதுதான்.

அந்த வகையில் இப்படத்தின் மூலம் அந்த கனவையும் நிறைவேற்றும் விதமாக தூண்டிலை போட்டு விட்டார். இப்படி ட்ரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர்கள் எல்லாம் பழைய ஹீரோகளுக்கு குட்பாய் சொல்லிவிட்டு சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பி விட்டார்கள் என்றால் இனி எல்லாமே வெற்றி தான்.

Trending News