Actress Aishwarya Rajesh acted well in 5 village story: கோலிவுட்டில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் ,டஸ்கி ஸ்கின் அழகைக் கொண்டு கதாநாயகிக்கு ஏத்த ஃபார்முலாவையே மாற்றி எழுதி, யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத இடத்தை பிடித்து விட்டார். அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமாகி அதன் பின் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை 5 கிராமத்து கதையில் நடித்து கலக்கி உள்ளார்.
ரம்மி: கிராமத்தில் தோன்றும் ஒரு அழகிய காதல் கதை தான் ரம்மி திரைப்படம். இதில் விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் காதலர்களாக நடித்தனர். அதே போல் இனிகோவும் காயத்ரியும் இந்த படத்தில் இருக்கும் இன்னொரு காதல் ஜோடி. இவர்களது காதல் வீட்டிற்கு தெரிந்ததும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள்.
இதை அறிந்த ஊர் பெரிய தனம் விஜய் சேதுபதி அடித்தே கொன்று விடுவார்கள். கடைசியில் இன்னொரு காதல் ஜோடிகளான இனிக்கோ- மீனாட்சி இருவரையும் கொல்ல வந்தவர்களை ஐஸ்வர்யா ராஜேஷ் அருவாலால் வெட்டி கொன்று, கௌரவ கொலைகாரர்களிடமிருந்து இருந்து அந்த காதல் ஜோடியை காப்பாற்றி, இருவரையும் ஒன்று சேர்த்தார். இந்தப் படத்தின் துவக்கத்தில் ஒரு அழகான கிராமத்து பெண்ணாக தோன்றி, கடைசியில் பத்ரகாளியாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
பண்ணையாரும் பத்மினியும்: மலர்விழி என்ற கிராமத்து பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் தோன்றிய படம் தான் பண்ணையாரும் பத்மினியும். இதிலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். ஒரு பழைய காருக்கும், அதனால் ஈர்க்கப்படும் மனிதர்களுக்கும் இடையே நிகழும் உணர்ச்சி பூர்வமான படம் தான் இந்த படத்தின் கதை. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியின் மனைவியாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டினார்.
காக்கா முட்டை: இப்போது இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் இரண்டு பசங்களுக்கு அம்மாவாக நடிக்கவே முடியாது என்று கராராக சொல்லிவிடுவார்கள். காரணம் அப்படி நடித்தால் தங்களது மார்க்கெட் பறி போய்விடும் என அச்சப்படுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் இரண்டு பசங்களின் தாயாக ரொம்பவே எதார்த்தமாக நடித்தார். இந்த படத்திற்குப் பிறகு அவருடைய மார்க்கெட் டாப் கீரில் எகிறியது. நிஜமாகவே வட சென்னையில் குடிசையில் வாழும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பசங்களின் தாயாகவே அந்த கேரக்டரில் பிசுறு தட்டாமல் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
Also Read: ஐஸ்வர்யா ராஜேஷை நான் தான் வளர்த்து விட்டேன்.. ஓவர் அலப்பறையால் கிழித்து தொங்கவிட்ட இயக்குனர்
கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷின் 5 படங்கள்
தர்மதுரை: இந்த படத்தில் டாக்டராக நடித்த விஜய் சேதுபதிக்கு, கிராமத்து மின்னல் போல் தோன்றிய ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்ததுமே பிடித்து விடும். அவருக்கு மட்டுமல்ல இந்த படத்தை பார்த்த இளசுகளுக்குமே ஐஸ்வர்யா ராஜேஷின் மீது ஒரு கிரஷ் ஏற்பட்டது. அதுவும் டாக்டர் ஆன விஜய் சேதுபதி எழுதிய மருந்து சீட்டை பார்த்து கோழி கிறுக்கல் என கலாய்த்தது தான் ஹாசம்.
நம்ம வீட்டு பிள்ளை: தொடர்ந்த படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்து கலக்கிய படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தில் இப்படி ஒரு தங்கச்சி எனக்கு இருக்கணும் என்று எல்லா ஆண்களும் பொறாமைப்படும் அளவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு இருந்தது. கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் எந்த அளவிற்கு குடும்பத்திற்காகவும் அண்ணனுக்காகவும் தியாகங்களை செய்வார் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் உணர்வுபூர்வமாக இந்த படத்தில் காட்டினார்.
Also Read: இப்படி ஒரு அழகான, இளமையான மினிஸ்டர் பார்த்தது இல்லை ஐஸ்வர்யா ராஜேஷ்.. உதயநிதி ரியாக்சன்?