புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கொடூரமான வில்லனாக அருண் விஜய் கெத்து காட்டிய 5 படங்கள்.. அஜித்தையே மிரட்டி பார்த்த விக்டர்

ஆரம்பகால கட்டங்களில் ஹீரோவாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் அருண் விஜய். வாரிசு நடிகரான இவர் வெற்றி படங்களை கொடுத்து நிலையான இடத்தை பிடிப்பதற்கு ரொம்ப மெனக்கெட்டு வருகிறார். ஆனால் ஹீரோவாக இருந்து பிடிக்க முடியாத இடத்தை வில்லனாக மாறி தனக்கென தனி அடையாளத்தையே உருவாக்கியுள்ளார். அப்படியாக இவர் கொடூர வில்லனாக நடித்து கெத்து காட்டிய 5 படங்களை இங்கு காணலாம்.

சக்கர யுகா: 2016 ஆம் ஆண்டு இயக்குனர் எம் சரவணன் இயக்கத்தில் புனித் ராஜ்குமார், ரக்ஷிதா ராம் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு எஸ் தாமன் இசையமைத்துள்ளார். இதில் அருண் விஜய், ஓம்கார் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் தனது கொடூரமான முகத்தை காட்டியுள்ளார்.

Also Read: அருண் விஜய்க்கு பின் லக்கில்லாத நடிகர்.. அப்பாக்கள் பெரிய பிஸ்தாவாக இருந்தும் பயனில்லை

புரூஸ் லீ: 2015 ஆம் ஆண்டு ஶ்ரீனு வைத்திலா இயக்கத்தில் ராம்சரண், ரகுல் ப்ரீத்தி சிங்  நடித்திருந்த இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருப்பார். அதிலும் தீபக் ராஜ் எனும் கதாபாத்திரத்தில் ராம் சரணுக்கு எதிராக தனது வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார்.

சாகோ: சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷரத்தா கபூர் நடிப்பில் வெளியான ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இதில் அருண் விஜய், விஷ்வாங்க் ராய் என்னும் வில்லன் ரோலில் மாஸ் காட்டி இருப்பார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: மதில் மேல் பூனையாய் தவிக்கும் அருண் விஜய்.. பாலா, அஜித் நடுவில் படும் பாடு

என்னை அறிந்தால்: 2015 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார், அனுஷ்கா செட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் விக்டர் என்னும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் மாறுபட்ட வில்லனாக நடித்திருப்பார்.  இப்படம் இவரின் திரைவாழ்க்கைக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகும்.

செக்கச் சிவந்த வானம்: 2018 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய் சகோதரர்களாக இணைந்த நடித்த திரைப்படம் ஆகும். இதில் குற்றத் தொழிலில் ஈடுபடக் கூடிய தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு அந்த இடத்தை அரவிந்த் சாமி ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அருண் விஜய் தனது அண்ணனுக்கு எதிராக தனது தந்தையின் இடத்தை பிடிப்பதற்காக பல்வேறு வில்லத்தனங்களில் ஈடுபட்டு தனது கொடூரத்தனத்தை காட்டியிருப்பார்.

Also Read: நிற்க நேரமில்லாமல் 5 படங்களுடன் பிசியான அருண் விஜய்.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பாலாவின் கூட்டணி

Trending News