புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

80, 90களில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 5 படங்கள்.. எல்லாமே சூப்பர் ஹிட்டுன்னு சொன்னா நம்புவீர்களா!

ஹீரோக்களை மையமாக வைத்து படங்கள் உருவான காலகட்டத்தில், பெண்களை ஹீரோவுக்கு நிகராக வைத்து எடுத்த 5 படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. அப்படி 80, 90களில் வெளியான இந்த 5 படங்களைப் பற்றி பார்ப்போம்.

அவள் ஒரு தொடர்கதை: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சுஜாதா ஹீரோவிற்கு நிகராக நடித்திருப்பார். இந்த படத்தில் வேலைக்கு செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுத்து இருப்பார்கள்.

இதில் சுஜாதா தனது குடும்பத்திற்காக திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்கு செல்லும் பெண்ணாக நடித்து மாஸ் காட்டி இருப்பார். இதில் கமலஹாசன் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது.

புதுமைப்பெண்: பாரதிராஜா இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பாண்டியன்-ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் பிராமண பெண்ணான ரேவதி, வங்கி ஊழியரான பாண்டியனை காதலிப்பார். ஒரு கட்டத்தில் பாண்டியன் வங்கியில் பணத்தை களவாடிய குற்றத்திற்காக ஜெயிலுக்கு செல்வார்.

அப்போது கணவரை மீட்க பல போராட்டங்களை எதிர்கொள்ளும் ரேவதியை, சிறையில் இருந்து வெளிவந்த பாண்டியன் நடத்தையில் சந்தேகப்பட்டதால் தன் தந்தை தந்த இந்து புனித நூலை குழி தோண்டி புதைத்து விட்டு புயலாக பொங்கி எழுந்து படித்தாண்டுவார். இப்படி புரட்சிகர பெண்ணாக இதில் ரேவதி அவதாரம் எடுத்து நடிப்பில் மிரட்டி இருப்பார்.

சிந்து பைரவி: 1985 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சுஹாசினி, சிவகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் சுஹாசினி, ஏற்கனவே திருமணம் ஆன பாடகராக இருக்கும் காதலன் சிவக்குமாரை ஏற்றுக் கொள்வாரா என்பதுதான் படத்தின் கதை. இதில் சுஹாசினி மிகவும் யதார்த்தமாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

மகளிர் மட்டும்: 1994 இல் ரேவதி, ஊர்வசி, ரோகினி உள்ளிட்ட இணைந்து இந்த படத்தில், அலுவலக வேலைக்கு செல்லும் பெண்கள் படும் பாட்டை வெளிப்படுத்தி இருப்பார்கள். இதில் அலுவலக மேலதிகாரியாக இருக்கும் நாசர் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அவருக்கு இந்த மூன்று பெண்களும் சேர்ந்து ஹீரோ ரேஞ்சுக்கு சவுக்கடி கொடுத்து மாஸ் காட்டி இருப்பார்கள்,

கல்கி: 1996 ஆம் ஆண்டு சுருதி, ரகுமான், பிரகாஷ் ராஜ், கீதா உள்ளிட்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் கல்கி கதாபாத்திரத்தில் சுருதி ஹீரோவை மிஞ்சும் அளவுக்கு தனது நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

இவ்வாறு இந்த 5 படங்களில் கதாநாயகன்கள் நடித்திருந்தாலும், அதிக முக்கியத்துவம் அதில் நடித்திருக்கும் கதாநாயகிகளின் கேரக்டர்கள் தான் வலுவாக பேசப்பட்டு ரசிகர்களின் கவனம் பெற்றது. ஆகையால் இந்த படங்கள் இப்போதும் டிவியில் போட்டால் அதை ரசிகர்கள் விரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News