புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரீ-ரிலீஸ் செய்தால் வசூல் வேட்டையாடும் அஜித்தின் 5 படங்கள்.. இன்றும் ரஜினி ரசித்துப் பார்க்கும் படம்

சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையினால் படிப்படியாக முன்னேறியவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது தமிழகத்தில் அசைக்க முடியாத ஆலமரமாய் வளர்ந்து இருப்பதற்கு அவருடைய ரசிகர்கள் தான் காரணம். இதற்காகவே அஜித் ரசிகர்கள் விரும்பும் தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் ஆணித்தரமாக இருக்கிறார். அதிலும் அஜித் நடிப்பில் வெளியான 5 படங்களை மறுபடியும் ரீலீஸ் செய்தால் வசூல் வேட்டை ஆட கூடிய சோடை போகாத படங்களாகும். அவற்றைப் பற்றி பார்ப்போம்.

காதல் கோட்டை: 1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் அஜித்குமார், தேவயானி நடிப்பில் வெளியான காதல் கோட்டை திரைப்படம், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஏனென்றால் இந்த படத்தில் காதலிக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே காதலிப்பார்கள். கடைசியில் இவர்கள் எப்படி சேர்கின்றனர் என்பதே படத்தின் கதை. இதில் சூர்யாவாக அஜித்தும், கமலியாக தேவயானியும் மிகவும் எதார்த்தமாக நடித்து படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

காதல் மன்னன்: சரண் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு அஜித்குமார், மனு, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் மன்னன். இந்த படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப அஜித் நிஜமாகவே காதலின் மன்னனாக ரசிகைகளின் மனதில் குடியேறினார். இதில் சிவாவாக திலோத்தமாவை மட்டுமல்ல பலரது இதயத்தை கவர்ந்தார். இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல், திரையரங்கில் தாறுமாறாக வசூலை வாரி குவித்தது. இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்தாலும் மறுபடியும் கல்லா கட்டலாம்.

Also Read: விஜய்யுடன் மோத தயாரான அர்ஜுன்.. லியோ படத்தைப் பற்றி கூறிய சுவாரசியமான தகவல்

வாலி: அல்டிமேட் சூப்பர் ஸ்டார் அஜித் நடிப்பில் சிம்ரன் கதாநாயகியாக நடித்த திரைப்படம் வாலி. 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை எஸ்ஜே சூர்யா இயக்கினார். இதில் அஜித் இரட்டை சகோதரர்களான தேவா, சிவா என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் மூத்தவர் தேவாவிற்கு காது கேட்காத வரும், ஊமையுமான தோற்றத்தில் அஜித் தனது சிறப்பான நடிப்பை வெளிகாட்டிருப்பார். இதில் தம்பி சிவாவின் மனைவியான சிம்ரனை, அண்ணன் தேவாவும் அடைய ஆசைப்படுவது போல் படத்தை எடுத்திருப்பார்கள்.

இராமாயணத்தில் வரும் சுக்ரீவனின் சகோதரனான வாலி மற்றும் சுக்ரீவனின் மனைவி ஆகியோரை மையமாக வைத்து இக்கால கட்டத்தில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தை இயக்கியிருப்பார். இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போதும் கூட இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் பல கோடியை அள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Also Read: மகிழை தூக்கிட்டு 11 வருடங்களுக்குப் பின் அஜித்துடன் இணையும் இயக்குனர்.. லியோவுக்கு ட்விஸ்ட் வைத்த ஏகே 62

பில்லா: 2007 ஆம் ஆண்டு அஜித்குமார், நமீதா, நயன்தாரா, பிரபு ஆகியோர் இணைந்து நடித்த சூப்பர் சூப்பர் ஹிட் அடித்த படம் தான் பில்லா. இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு முன்பே கே பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி, சில மாற்றங்களுடன் அஜித்தின் பில்லா திரைப்படம் வெளியானது. ரவுடிகளின் தலைவனாக இருக்கும் பில்லா இறந்து போக, அவருக்கு பதில் போலீசின் சார்பில் அனுப்பப்பட்ட போலி பில்லா எப்படி அந்த ரவுடி கும்பலை கையும் களவுமாக பிடிக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.

ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இன்னமும் அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தை ரஜினி ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் ஃபேவரைட் படமும் அஜித்தின் பில்லா படம் தானாம். மேலும் பில்லா 2 வெளியானாலும் இந்த படங்களை ரீ-ரிலீஸ் செய்தால் திரையரங்கில் வசூல் வேட்டையாடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் மங்காத்தா. இந்தப் படம் அஜித்தின் 50-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் அஜித் ஆன்ட்டி ஹீரோவாக மாஸ் காட்டியிருப்பார். இதில் ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக கொள்ளையடித்து, அதை எப்படி அஜித் சாதுரியமாக திட்டம் போட்டு தனதாக்கி கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து, திரையரங்கில் தாறுமாறாக ஓடியது. அதிலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பில்லா படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்தாலும், அதே அளவு ரெஸ்பான்ஸ் மறுபடியும் கிடைக்கும் என்று தல ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.

Also Read: அஜித்தை டென்ஷனாகிய மங்காத்தா தயாரிப்பாளர்.. இதற்கெல்லாம் காரணம் சூர்யா தானா

இவ்வாறு இந்த 5 படங்களை தான் மறுபடியும் ரீலீஸ் செய்தால் வசூல் வேட்டையாட கூடிய தரமான படங்களாக ரசிகர்களின் மனதில் குடி கொண்டிருக்கிறது. அதிலும் அஜித்தின் பில்லா படத்தை இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Trending News