வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வித்தியாசமான கதையால் தோற்று, எப்பவுமே கொண்டாடும் கமலின் 5 படங்கள்.. மறக்க முடியாத நந்தகுமார்

Unforgettable kamal 5 movies: கமல் மற்ற நடிகர்களைப் போல கமர்சியலாக ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைக்கு கூடியவர் அல்ல. தான் எடுத்து நடிக்கக்கூடிய படங்கள் சற்று வித்தியாசமாகவும், எவ்வளவு காலங்கள் ஆனாலும் அந்த படங்களை பார்க்கும் பொழுது அதில் உள்ள கதைகளை பற்றி பேசக்கூடிய சாதனை படமாக இருக்க வேண்டும் என்று ஆசை படக்கூடியவர். அதனால் தான் வணிக ரீதியாக படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று சில படங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

அன்பே சிவம்: சுந்தர் சி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு கமல் மற்றும் மாதவன் நடிப்பில் அன்பே சிவம் படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது வெவ்வேறு மனிதர்கள் எதிர்பாராத பயணங்கள் மூலம் சந்திக்கும் பொழுது ஏற்பட்ட அனுபவங்கள், கம்யூனிசம், நாத்திகம் மற்றும் நற்பண்பு போன்ற கருத்துக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட இப்படத்தை 20 வருடங்களுக்கு முன் பார்க்கும்பொழுது பெருசாக ஒன்றும் புரியவில்லை. ஆனால் இப்பொழுது பார்க்கும் பொழுது மனதை உருக்கிய காவியமாக வியந்து போய் இருக்கிறது.

குணா: இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு குணா திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், ரோஷினி, ரேகா, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல… அதையும் தாண்டி புனிதமானது…” என்று கமல் சொல்லும் டயலாக் இப்பொழுதும் பலரின் ஃபேவரிட் வசனமாக இருக்கிறது. கமல் நடிப்பில் முத்திரை பதித்த படம் தான் இது. காலத்தால் அழியாத காவியமாகவும், உலக நாயகனால் தான் தமிழ் சினிமாவில் இந்த மாதிரி படங்களை பார்க்க முடிகிறது என்பதற்கு ஏற்ற மாதிரி பிரமாதமான நடிப்பை கொடுத்திருப்பார்.

ஆளவந்தான்: இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் ஆளவந்தான் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், நந்தகுமார் மற்றும் விஜயகுமார் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பை கொடுத்திருப்பார். அத்துடன் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா மற்றும் பலர் இப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். 20 வருடங்கள் முன்பே இப்படி ஒரு ஆக்ஷன் படமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நந்தகுமாரின் நடிப்பு மிரட்டலாக இருக்கும். இந்த மாதிரி படங்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரே கலைஞன் கமல் மட்டுமே.

Also read: அந்தர்பல்டி அடித்த இந்தியன் 2 படம்.. கமல் இல்லாமல் நடக்கும் சூட்டிங்

ஹேராம்: 2000 ஆம் ஆண்டு கமல், இயக்கி, எழுதி, நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஹேராம். இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்று நிகழ்வுகளின் மறுபக்கத்தை காட்டிய படம். இந்தியாவிற்கு அஹிம்ச வழியில் சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தி அவர்களை கொலை செய்ய நினைத்த பலரில் ஒருவரின் கதை. இந்த கதையில் கமல் ஒருவரால் மட்டுமே தான் நடிக்க முடியும் என்பதற்கு மிகப்பெரிய சாத்தியமான படைப்பு. வணிகரீதியாக அன்று தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால் இன்று காலம் கடந்தும் பேசும் படமாக இருப்பது தான் இவருடைய படைப்புக்கு கிடைத்த வெற்றி.

குருதிப்புனல்: பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு கமல், அர்ஜுன் நடிப்பில் குருதிப்புனல் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது பயங்கரவாத குழுவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இரண்டு காவல்துறை அதிகாரிகளை சுற்றி கதை நகரும். இப்ப வருகிற படங்கள் ஆக்சன் படம் என்று சொல்கிறார்கள். ஆனால் 29 வருஷத்துக்கு முன்னாடியே ஒரு ஆக்சன் படமாக கொடுத்தவர் தான் உலக நாயகன். மறுபடியும் இதனுடைய பார்ட் 2 வராதா என்று பலரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி கமல் நடிப்பில் வெளிவந்த எத்தனையோ படங்களில் வித்தியாசமான கதையை கொண்டு வந்திருந்தாலும் அந்த நேரத்தில் விமர்சன ரீதியாக தோற்றுப் போய் இருக்கிறது. ஆனால் கதைகள் எப்பவுமே கொண்டாடும் அளவிற்கு மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால் தான் சினிமாவில் உலக நாயகனாக ஜொலித்து வருகிறார்.

Also read: கமல் கைவிட்டாலும் எச்.வினோத்துக்கு அடித்த ஜாக்பாட்.. 51வது படத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட கேப்டன்

Trending News