ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தனித்துவமான குரல் மற்றும் நடிப்பால் கலக்கிய சரத்பாபு.. நண்பன் ரஜினியுடன் சேர்ந்து நடித்து சூப்பர் ஹிட் ஆன 5 படங்கள் 

சினிமா துறையில் டாப் ஹீரோக்களின் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் சரத்பாபு. அதிலும் தனது தனித்துவமான குரல் மற்றும் நடிப்பு திறமையால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். அப்படியாக சரத்பாபு துணை கதாபாத்திரத்தில் நடித்து ஹிட் கொடுத்த 5 படங்களை பற்றி பார்க்கலாம்.

நெற்றிக்கண்: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் நெற்றிக்கண். இதில் ரஜினிகாந்த் உடன் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சரத்பாபு யுவராஜா என்னும் கேரக்டரில் சிறப்பு விருந்தினராக நடித்திருப்பார். அதிலும் தனது தனித்துவமான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரஜினியின் 5 காமெடி படங்கள்.. மீசையை வைத்து தேங்காய்-வை படுத்திய பாடு

முத்து: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, வடிவேலு, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் சரத்பாபு நடித்த ஜமீன்தார் கதாபாத்திரம் அனைவரையும் தூக்கி சாப்பிடும் விதமாக மிக கனகச்சிதமாக அமைந்திருந்தது. இப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்து, வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

முள்ளும் மலரும்: மகேந்திரன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முள்ளும் மலரும். இப்படம் கல்கியின் நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. மேலும் இதில் ரஜினி உடன் ஷோபா சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் சரத் பாபு தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதைத்தொடர்ந்து படம் சூப்பர் ஹிட் அடித்து மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: ரஜினி சாருக்கு மட்டும்தான் அந்த மனசு வரும்.. 20 வருடங்களுக்குப் பின் மனம் திறக்கும் KS ரவிக்குமார்

வேலைக்காரன்: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதில் ரஜினிகாந்த், சரத்பாபு, அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சரத்பாபு, ரஜினிகாந்த்திற்கு முதலாளியாக நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் படம் முழுவதிலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைத்தது.

அண்ணாமலை: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை. இதில் ரஜினிகாந்த் உடன் குஷ்பூ ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருக்கும் சரத் பாபு மற்றும் ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் பிளவை சந்திக்கின்றனர். அதிலும் சரத் பாபு அசோக் என்னும் கேரக்டரில் நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதுமட்டுமல்லாமல் படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

Also Read: அண்ணாமலை கதையை வைத்து மற்றுமொரு படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா.. நீங்க பலே கில்லாடி தான்

Trending News