தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளைக் கொண்டு திகழ்ந்தவர் தான் டி ராஜேந்தர். இவர் தனது அடுக்கு மொழி வசனங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதிலும் இவரையே மிஞ்சும் அளவிற்கு தனது நடிப்பின் மூலம் அலப்பறை கொடுத்துள்ளார் சிம்பு. மேலும் காதல் என்ற பெயரில் பஞ்சு டயலாக்குகளால் தலைவலியையே வர வைத்திருப்பார். அப்படியாக சிம்புவின் அலப்பறையில் வெளிவந்த 5 படங்களை இங்கு பார்க்கலாம்.
அலை: விக்ரம்குமார் இயக்கத்தில் சிலம்பரசன், த்ரிஷா நடிப்பில் உருவான திரைப்படம் அலை. இதில் விவேக், ரகுவரன், சரண்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதிலும் இப்படத்தில் சிம்பு, ஆதி என்னும் கதாபாத்திரத்தில் ஓவராக கெத்து காட்டி நடித்துள்ளார்.
Also Read: டி ராஜேந்தரால் மோசமான பெயர் வாங்கும் சிம்பு.. நாலாபக்கமும் இருந்து விழும் அடி
குத்து: வெங்கடேஷ் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குத்து. இதில் சிலம்பரசன் குரு என்னும் கதாபாத்திரத்திலும், ரம்யா அஞ்சலி என்னும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தில் தனது காதலை கதாநாயகியின் அப்பாவை மீறி எவ்வாறு வெற்றி கொள்கிறார் என்பதை மையமாக வைத்து வெளிவந்ததாகும். அதிலும் இப்படத்தில் தனது விரலின் மூலம் வித்தையை காட்டி தலைவலியையே ஏற்படுத்தி இருப்பார் சிம்பு.
தம்: 2003 ஆம் ஆண்டு வெளியான காதல் கலந்த நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதில் சிலம்பரசன் சத்யா என்னும் கதாபாத்திரத்தில் காவலரின் மகனாக நடித்துள்ளார். அதிலும் உயர் அதிகாரியாக இருக்கக்கூடிய காவல் ஆணையரின் மகளை காதலித்து பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். அதுமட்டுமல்லாமல் டிஆர்ஐயே மிஞ்சும் அளவிற்கு அலப்பறை கொடுத்து நடித்திருப்பார்.
Also Read: பெரும் சிக்கலில் வெந்து தணிந்தது காடு.. உச்சகட்ட மன கஷ்டத்தில் சிம்பு
வல்லவன்: 2006 ஆம் ஆண்டு சிலம்பரசன் இயக்கி, நடித்த திரைப்படம் தான் வல்லவன். இதில் நயன்தாரா, ரீமாசென், சந்தியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சிம்பு வல்லவன் மற்றும் பல்லன் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி நடித்துள்ளார். அதிலும் ரீமாசென்னுடன் இவர் அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள் அல்டிமேட் ஆக இருக்கும்.
காதல் அழிவதில்லை: டி ராஜேந்தர் இயக்கத்தில் காதலை மையமாக வைத்து வெளியான திரைப்படம் காதல் அழிவதில்லை. இதில் சிலம்பரசன், சார்மி கவுர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் இப்படத்தில் சிம்பு போராட்டங்களில் தத்தளிக்கும் தனது காதலுக்காக பஞ்ச டயலாக்குகளை வாரி இரைத்திருப்பார். மேலும் அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு பஞ்சு வசனங்களால் அனைவரையும் பஞ்சர் ஆக்கி இருப்பார் என்றே சொல்லலாம்.
Also Read: சிம்பு நயன்தாரா பற்றிய ரகசியத்தை உளறிய இயக்குனர்.. பட புரமோஷனுக்காக போட்டுக்கொடுத்த பரிதாபம்