சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தயாரிப்பாளர்களை முக்காடு போட வைத்த கார்த்தியின் 5 படங்கள்.. தலையில் அடித்து புலம்ப வைத்த படம்

Karthi In Failure Movies: கார்த்தி பொறுத்தவரை ஒரு படத்தை வெற்றியாக கொடுக்க வேண்டும் என்றால் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் கிட் கொடுத்து விடுவார். இல்லையென்றால் பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு மொக்கையாக ஃபெயிலியர் படத்தையும் கொடுத்து விடுவார். அப்படி இவருடைய கேரியரில் தோல்வியடைந்து தயாரிப்பாளர்கள் தலையில் முக்காடை போட வைத்த படங்களை பற்றி பார்க்கலாம்.

அலெக்ஸ் பாண்டியன்: இயக்குனர் சூரஜ் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு கார்த்தி, அனுஷ்கா மற்றும் சந்தானம் காம்போவில் வெளிவந்த திரைப்படம் தான் அலெக்ஸ் பாண்டியன். இப்படத்தில் சந்தானத்தின் மொக்கையான காமெடி கூட பார்த்துவிடலாம். ஆனால், காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில் அலெக்ஸ் கேரக்டரில் கார்த்தி மொக்கையாக நடித்த நடிப்பை பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு செட்டாகாமல் இருக்கும். இப்படம் அவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

தேவ்: இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு கார்த்தி, ராகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் தேவ் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் கார்த்தி ஏதாவது வித்தியாசமான சாகசங்களை பண்ண வேண்டும் என்று முயற்சி செய்வார். அப்பொழுது கார்த்தியை டைவர்ட் பண்ணுவதற்காக ஒரு தொழிலதிபரான மகளை கோர்த்து விட்டு அவருடன் காதல் வலையில் சிக்க வைத்து விடுவார். இப்படத்தின் கதை ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் மக்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது.

Also read: ஊர் வாய்க்கு பயந்து வந்த சிவகுமார், கார்த்தி.. கேப்டன் சமாதியில் தேம்பித் தேம்பி அழுத சூர்யா

சகுனி: இயக்குனர் சங்கர் தயாள் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு சகுனி திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்தி, சந்தானம், பிரணிதா, பிரகாஷ்ராஜ், ராதிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சந்தானம் மற்றும் கார்த்தியின் காம்போவில் வரும் காமெடிகள் அனைத்தும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கும். அத்துடன் படத்தையும் ஒருமுறை பார்க்கலாம் என்பதற்கு ஏற்ப கதை அமைந்திருக்கும். இருந்தாலும் இப்படம் கார்த்திக்கு தோல்வி படமாக முத்திரை குத்தியது.

காற்று வெளியிடை: இயக்குனர் மணிரத்தினம் படம் வித்தியாசமான கதைகளாக அமைந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விடும். அந்த நம்பிக்கையில் தான் கார்த்தியை வைத்து ஒரு ரொமாண்டிக் மற்றும் காதல் படமாக இப்படத்தை எடுத்தார். அதற்கேற்ற மாதிரி இப்படத்தில் அமைந்திருக்கும் காட்சிகள் அனைத்தும் ஒரு உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அத்துடன் இதில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ராவ் எதார்த்தமான காதலை வெளிப்படுத்தி இருப்பார். ஆனாலும் இப்படம் ஹீட் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்காமல் போய்விட்டது.

ஜப்பான்: இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் 25வது படமாக ஜப்பான் வெளிவந்தது. இதில் அணு இமானுவேல், கே எஸ் ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது 200 கோடி மதிப்பிலான நகைகளை திருடியவரை காவல்துறை கண்டுபிடிக்கும் விதமாக கதை நகரும். ஆனாலும் இப்படம் கார்த்தி நடித்த படங்களிலே மிக மொக்கையான படமாகவும், இப்படத்தை ஒரு முறை கூட பார்க்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தலையில் அடித்துக் கொண்டு பார்த்தவர்கள் புலம்பும்படியாக அமைந்து விட்டது.

Also read: 2023- இல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத 5 படங்கள்.. கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளான கார்த்தி

Trending News