திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பெண் மோகத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் மிரட்டிய 5 படங்கள்.. மச்சினிச்சியை அடைய நினைத்த வில்லத்தனம்

தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் அதில் நடித்து அசத்திவிடும் பிரகாஷ்ராஜ் ஏராளமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் சில கதாபாத்திரங்கள் கொடூரத்தின் உச்சமாக இருக்கும். அந்த வகையில் பிரகாஷ்ராஜ் பெண் மோகம் கொண்ட வில்லனாக நடித்த ஐந்து திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

பூமணி: 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் முரளி, தேவயானி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். அதில் பிரகாஷ்ராஜ் தம்பியின் மனைவியான தேவயானி மீது ஆசைப்படும் மோசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் வந்த சில ஆண்டுகளில் அஜித் நடிப்பில் வெளியானவாலி திரைப்படம் அதே சாயலில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Also read:தனுஷ்-பிரகாஷ்ராஜ் கூட்டணியில் வெளியான 4 படங்கள்.. உங்களுக்கு பிடித்த படம் எது

ஆசை: வசந்த் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் அஜித், சுவலட்சுமி, ரோகிணி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்திருப்பார்கள். அதில் பிரகாஷ்ராஜ் தன் மனைவியின் தங்கையான சுவலட்சுமியை அடைவதற்காக பல வில்லத்தனம் செய்வார். அதிலும் தன் மனைவி ரோகினியை அவர் கொடூரமாக கொலை செய்வது படு மிரட்டல் ஆக இருக்கும்.

ராசி: முரளி அப்பாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ரம்பா ஆகியோர் நடித்திருப்பார்கள். அதில் அஜித்துடன் இருக்கும் பகை காரணமாக அவர் காதலிக்கும் ரம்பாவை திருமணம் செய்து கொள்வதற்காக பிரகாஷ்ராஜ் பல வில்லத்தனங்களை செய்வார்.

Also read:தயாரிப்பிலும் பெத்த லாபம் பார்த்த பிரகாஷ்ராஜ்.. காசு போட்ட 6 படங்களுமே ஹிட்

வானவில்: மனோஜ் குமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் அர்ஜுன், அபிராமி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருப்பார்கள். அதில் பிரகாஷ்ராஜ் அபிராமியின் மீது காதல் கொள்வார். ஆனால் அவர் அர்ஜுனை விரும்பும் காரணத்தால் அவருடைய காதலை ஏற்க மறுத்துவிடுவார். இதனால் கோபமடையும் பிரகாஷ்ராஜ் பல வில்லத்தனங்களை செய்வார்.

கில்லி: தரணி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் விஜய், திரிஷா ஆகியோர் நடித்திருப்பார்கள முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் திரிஷாவை திருமணம் செய்ய ஆசைப்படுவார். அதற்காக த்ரிஷாவின் அண்ணன்களை கொன்று திருமணத்திற்கு மிரட்டுவார். இப்படி கொடூர வில்லனாக நடித்திருந்த பிரகாஷ்ராஜுக்கு இந்த திரைப்படம் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Also read:திருமண வாழ்க்கையால், திரைவாழ்க்கையில் அடி வாங்கிய 3 பேர்.. பச்சைத் துரோகம் செய்த பிரகாஷ்ராஜ்

Trending News