நாவல், சிறுகதை, புதினம் போன்றவற்றில் இயக்குனர்களுக்கு மிகுந்த ஆர்வம் கொண்டவற்றை படங்களாக எடுத்துள்ளனர். அதுவும் நாவலை ஒரு படமாக எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஏனென்றால் மிக நீண்ட நாவலை சுவாரஸ்யம் குறையாமல் ஒரு படகமாக எடுக்க வேண்டும் என்றால் மிகவும் கடினம். ஆனால் நாவலை படமாக எடுத்து ஹிட்அடித்த ஐந்து படங்களை தற்போது பார்க்கலாம்.
கன்னத்தில் முத்தமிட்டால் : மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், கீர்த்தனா பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டாய். இந்தப் படம் சுஜாதாவின் “அமுதாவும் அவனும்” சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
Also Read :ஜெயம் ரவிக்கு மட்டும் ரெண்டு கொம்பா.. முடியவே முடியாது என மறுத்த மணிரத்தினம்
நான் கடவுள் : ஆர்யா, பூஜா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் கடவுள். இந்தப் படம் எழுத்தாளர் ஜெயமோகனின் “ஏழாவது உலகம்” என்ற புதினத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.
அசுரன் : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அசுரன். இந்த படம் பூமணி எழுதிய “வெக்கை” என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.
Also Read :பாலிவுட் படங்களின் தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்.. நாசுக்காக சுதாரித்துக் கொண்ட மணிரத்தினம்
சூரரைப் போற்று : சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் கதையான “சிம்பிளிஃபை” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்தது.
பொன்னியின் செல்வன் : மணிரத்தினம் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்துள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படம் கல்கியின் நாவலான “பொன்னியின் செல்வன்” கதையின் தழுவல் ஆகும். எம்ஜிஆர், கமல், மனோபாலா என மூவரும் போட்டி போட்டுக்கொண்டு இப்படத்தை எடுக்க நினைத்தும் கடைசியில் மணிரத்தினம் தான் எடுத்து முடித்துள்ளார்.