புதன்கிழமை, ஜனவரி 8, 2025

யானை போல் தலையில் மண்ணை வாரி போடும் இயக்குனர்கள்.. தனுஷ் முதல் ஃபேமிலி ஆடியன்ஸை இழந்த 5 படங்கள்

5 films that failed to impress the family audience: இப்போ இருக்கும் டாப் இயக்குனர்களுக்கு என்னதான் ஆச்சு! என்று கேட்க வைக்கின்றனர். அந்த அளவிற்கு சமீப காலமாகவே டாப் ஹீரோக்களை வைத்து வன்முறையான படங்களை மட்டுமே எடுத்து தங்களுக்கு தானே வேட்டு வச்சுக்கிறார்கள். ஏதாவது ஒன்னு ரெண்டு படங்களில் வன்முறையை காட்டினால் பரவாயில்லை, ஆனால் இப்ப வர படங்கள் எல்லாமே ஓவர் வயலன்ஸ் படங்களாகவே இருக்கிறது. இதனால் தனுஷ் முதல் சிவகார்த்திகேயன் வரை தங்களுக்கு இருந்த ஃபேமிலி ஆடியன்ஸை இழந்து வருகின்றனர்.

லியோ: இதுவரை விஜய் நடித்த படங்களில் லோகேஷ் இயக்கிய லியோ படத்திற்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தது. ஏனென்றால் இளைய சமுதாயத்திற்கு என்னதான் சொல்ல பார்க்கிறார்கள் என்று பலரும் ஆதங்கப்பட்டனர். லியோ படம் முழுக்க கஞ்சா புகை வாசம் தான் வீசியது. ‘தளபதியே கஞ்சா அடிக்கும் போது நான் அடிச்சா தப்பா!’ என்று இளசுகள் சொல்லும் அளவுக்குகளுக்கு விஜய் தவறான வழிகாட்டியாக இருந்து விட்டாரே! என பலரும் ஆதங்கப்பட்டனர். அதோடு இதில் ஓவரா வயலன்ஸ் கட்டியதால் ஃபேமிலி ஆடியன்ஸின் சப்போர்ட் கிடைக்கவில்லை, இளசுகள் மட்டுமே திரையரங்கில் லியோவை கொண்டாடினார்கள்.

மார்க் ஆண்டனி: கேங்ஸ்டர் கதையில் டைம் டிராவலை வைத்து ஒரு மசாலா படமாக ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் தான் மார்க் ஆண்டனி. கடந்த சில வருடங்களாகவே விஷாலின் படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் துவங்கினார். ஆனால் இந்த படத்தை பார்க்க குடும்பப் பெண்கள் திரையரங்கில் கால் எடுத்து வைக்க மறுத்து விட்டனர். காரணம் இதில் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு நிறைய கெட்ட வார்த்தைகள் நிரம்பிக் கிடந்தது.

ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சேர்ந்து நடித்த ஜெயிலர் படம் வன்முறையின் உச்சம் என்றே சொல்லலாம். ட்ரம்முக்குள் போட்டு ஆசிட் கலந்து மனிதனைக் கொல்வது, நிறைய சண்டை காட்சிகள் என படம் முழுக்க வயலன்ஸ் தான். யானை தன் தலையிலே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல், கொஞ்சம் வயலன்ஸை மட்டும் படத்தின் இயக்குனர் நெல்சன் கம்மி பண்ணி இருந்தால் ஜெயிலர் இன்னும் டபுள் மடங்கு வசூலை தட்டி தூக்கி இருக்கும்.

Also Read: ஜான் ஏறுனா முழம் சறுக்குது.. நிம்மதியை தேடி இமயமலைக்கு போகும் சூப்பர் ஸ்டார்

ஃபேமிலி ஆடியன்ஸை கவராமல் போன 5 படங்கள்

கேப்டன் மில்லர்: பிரிட்டிஷ் அடக்கு முறையில் இருந்து தன் மக்களை மீட்டெடுக்க தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு ஆயுதப் போராளியாக நடித்த படம் தான் கேப்டன் மில்லர். என்னதான் இந்த படம் நடிப்பு அசுரனுக்கு பெரும் வேட்டையாக இருந்தாலும், படம் முழுக்க ரத்தகளரியும் துப்பாக்கி சத்தமும் தான் ஒலித்தது. வன்முறையை அதிகம் காட்டியதாலேயே இந்த வருஷம் பொங்கலுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்தும் ஃபேமிலி ஆடியன்ஸை கவரல. ஏற்கனவே தியேட்டரில் இருக்கும் சவுண்ட், வைப்ரேஷனில் இந்த படத்தை பெண்களும் குழந்தைகளும் திரையரங்கிற்கு சென்று பார்ப்பதெல்லாம் விஷ பரிட்சை தான்.

அமரன்: கடைசியாக சிவகார்த்திகேயன் ஏலியன் கான்செப்டில் செம ஜாலியான அயலான் என்ற படத்தை கொடுத்த பிறகு, இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இந்த டீசரில் சிவகார்த்திகேயன் தீவிரவாதிகளை கொன்று குவிக்க வேண்டும் என்ற கொலை வெறியுடன் கெட்ட வார்த்தையும் பேசி இருக்கிறார். அதோடு பொதுவெளியில் தலையை வெட்டி தண்டனை கொடுப்பது, குண்டு வெடிப்பு தோட்டாக்களின் சத்தம் என படம் முழுக்கவே வன்முறையாக தான் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. இந்த படம் இளசுகளுக்கு பிடித்தாலும் குழந்தைகளும் பெண்களும் தியேட்டரில் வந்து பார்க்க விரும்ப மாட்டார்கள். தளபதி விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு தான் ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம். ஆனால் அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் சப்போர்ட் கிடைப்பது கஷ்டம் தான்.

Also Read: அவமானப்படுத்தியும் இடி தாங்கியாக குரல் கொடுத்த மன்சூர்.. ஒரே பேட்டியில் விஜய்க்கு வைத்த கொட்டு

Trending News