வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கமலே எதிர்பார்க்காமல் ஃபெயிலியர் ஆன 5 படங்கள்.. கடனாளியாக தத்தளித்தது தான் மிச்சம்

உலக நாயகன் கமல்ஹாசனின் பங்களிப்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரியது. இவர் இயக்கம், தயாரிப்பு, நடிகர், பாடகர், பாடலாசிரியர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கமலே எதிர்பார்க்காமல் அவருடைய 5 படங்களால் தோல்வியடைந்து கடனில் தத்தளித்தார்.

அன்பே சிவம் : சுந்தர் சி இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பே சிவம். இந்த படம் வெளியான போது தோல்வியை சந்தித்தது. ஆனால் சில வருடங்களுக்குப் பின்பு இந்த படத்தின் கதையை புரிந்து கொண்டு அன்பே சிவம் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

Also Read :தீபாவளியன்று ரிலீசான 6 படங்கள்.. கமல், ரஜினியுடன் போட்டியிட்டு ஜெயித்த விஜயகாந்த், பாக்யராஜ்

ஹே ராம் : கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் ஹேராம். இப்படத்தில் ஷாருக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி என பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான போது படுதோல்வி அடைந்தது. ஆனால் மூன்று தேசிய விருதுகளை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

மும்பை எக்ஸ்பிரஸ் : சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் மும்பை எக்ஸ்பிரஸ். இந்த படத்தில் கமல், மனிஷா கொய்ராலா, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். கமலின் இந்த படமும் மோசமான தோல்வியை சந்தித்தது.

Also Read :அசால்டாக ஒரு கோடி கொடுத்த கமல்.. காசு இல்ல உழைப்பை தரேன் என ஒதுங்கிய ரஜினி

ஆளவந்தான் : சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் சங்கர் மகாதேவன் இசையில் வெளியான திரைப்படம் ஆளவந்தான். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி படுமோசமான தோல்வியை அடைந்தது. இப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை கமலுக்கு தந்தது.

உத்தம வில்லன் : ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் லிங்குசாமி மற்றும் கமலஹாசன் தயாரிப்பில் கிரேசி மோகன் கதையில் வெளியான திரைப்படம் உத்தம வில்லன். இப்படத்தில் கமலஹாசன், கே பாலச்சந்தர், ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

Also Read :நம்பியவர்களை டீலில் விட்ட கமல்ஹாசன்.. இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது

Trending News