புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அப்பா மகன் பிரண்ட்ஷிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.. சமுத்திரகனி தம்பி ராமையா பிச்சு உதறிய ஹிட் படம்

பொதுவாகவே திரைப்படங்களில் அப்பா கதாபாத்திரங்களில்  நடிப்பவர்களை மிகவும் கண்டிப்புடன் இருப்பவர்கள் போன்று தான் காண்பித்துள்ளனர். சினிமாவில் இதுபோன்று நிறைய படங்கள்  வெளிவந்துள்ளது. ஆனால் அப்பா பிள்ளைகளுக்கு இடையே ஆன நட்பினை வைத்து ஒரு சில படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது.  இப்படியாக அப்பா மகன் பிரண்ட்ஷிப்பில் வெளிவந்த 5 படங்களை இங்கு காணலாம்.

வாரணம் ஆயிரம்: கௌதம் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம். இதில் இவருக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு தந்தை மகனுக்கும் இடையே உள்ள ஆழமான நட்பினை மிக அழகாக காண்பிக்கும், விதத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read: சூர்யா, கார்த்தி இரண்டு பேர் படத்தையும் ஒரே நேரத்தில் உசார் செய்த நடிகை.. கேரளா குட்டி கேரளா குட்டிதான்!

பேரன்பு: இயக்குனர் ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி நடிப்பில் வெளியான திரைப்படம் பேரன்பு. இப்படத்தில் அப்பா மகளுக்கு இடையேயான பிரண்ட்ஷிப்பை மையமாக வைத்து வெளியாகி உள்ளது. மேலும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றி பெற்றது.

அபியும் நானும்: 2008 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அபியும் நானும். இதில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் பிரகாஷ்ராஜ் தனது மகள் அபியின் மீது அப்பா மகள் உறவையும் தாண்டி சிறந்த நண்பர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: பிரகாஷ்ராஜின் உண்மை முகம்.. 50 கோடி கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்

கனா: அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் விளையாட்டை மையமாக வைத்து, வெளிவந்த திரைப்படம் தான் கனா. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அப்பாவான சத்தியராஜின் ஆசையை நிறைவேற்றி தனது நட்பினை வெளிப்படுத்தி இருப்பார். மேலும்  இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

அப்பா: 2016 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி எழுதி இயக்கிய திரைப்படம் ஆகும். இதில் அப்பா தனது மகனுக்கு உண்டான முழு சுதந்திரத்தையும் கொடுப்பதை மிக அழகாக காண்பித்துள்ளனர். அதிலும் கண்டிப்புடன் இல்லாமல் நட்பு ரீதியாக, தோள் கொடுக்கும் தோழனாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இவர்களின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது என்றே சொல்லலாம்.

Also Read: சமுத்திரக்கனி இயக்கி படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்.. ரூட்டை மாற்றி அக்கட தேசம் வரை சென்ற ரகசியம்

Trending News